ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: ஒருவரின் சம்பள வருமானத்தை வைத்து மட்டுமே ஓபிசி பிரிவினரை வசதி படைத்தவர் என முடிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துடன் சம்பள வருமானத்தை ஒப்பிடகூடாது எனக்கூறி உத்தரவிட்டது.
ஓபிசி கிரீமிலேயர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அதாவது, சம்பள வருமானத்தை வைத்து மட்டுமே ஓபிசி பிரிவினரை வசதி படைத்தவர் என முடிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் நீதிபதி ஆர் மகாதேவன் அமர்வு இந்த தீர்ப்பை அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஓபிசி பிரிவினருக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

ஓபிசி - கிரீமிலேயர்
ஏனெனில், கிரீமிலேயர் பிரிவில் அவர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டதாக கூறி பணி நியமனம் மறுக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம்,
தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துடன் சம்பள வருமானத்தை ஒப்பிடகூடாது எனக்கூறியது. மேலும், சென்னை, டெல்லி, கேரளா ஆகிய மாநில ஐகோர்ட்கள், ஓபிசி பிரிவினருக்கு ஆதரவாக தந்த தீர்ப்புகளை உறுதி செய்துள்ளது.
ஓபிசி - கிரீமிலேயர் என்பதை அறிமுகப்படுத்திய மண்டல் கமிஷன் தொடர்பான இந்திரா சாவ்னி தீர்ப்பில் எடுத்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு நோக்கத்தை தோற்கடிக்கும் விதமாக சம்பள வருமானத்தை இயந்திரத்தனமாக சேர்த்து கணக்கிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு
பொது துறை நிறுவனங்கள் (PSU), வங்கிகள் அல்லது தனியார் துறையில் பணியாற்றும் பெற்றோரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, கிரீமிலேயர் எனக் குறிப்பிடப்பட்டதால் ஓபிசி பிரிவிலிருந்து தங்களை நீக்கியதை எதிர்த்து சிவில் சர்வீஸ் தேர்வர்கள் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
டெல்லி, சென்னை கேரள உயர்நீதிமன்றங்கள் இந்த மனுவை ஏற்றுக்கொண்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications