ஒடிசா ரயில் விபத்து.. உயிரிழந்தோர் யார்! புகைப்படங்களை வெளியிட்ட ரயில்வே துறை! எங்கு பார்க்கலாம்
டெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரை அடையாளம் காணும் வகையில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மிக மோசமான ஒரு ரயில் விபத்து இப்போது அரங்கேறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டில் இல்லாத வகையில் மிக மோசான விபத்தாக இது கருதப்படுகிறது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12841) தினசரி மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நேற்று மாலை 3.20 மணிக்கு வழக்கம் போல இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் வழக்கம் போலவே கூட்டம் அதிகமாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒடிசா, ஆந்திரா வழியாக மறுநாள் சென்னை வந்தடையும்.
விபத்து: நேற்று மாலை இந்த ரயில் மாலை பாலசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் என்ற ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்தில் சிக்கியுள்ளது. அது சரக்கு ரயில் மீது மோதியதே விபத்திற்குக் காரணம் எனத் தெரிகிறது. இதில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது அங்கே 20 நிமிடங்கள் கழித்து வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயிலும் தடம் புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது மோதியது.
இப்படி மூன்று ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில பிரச்சினைகள் இருந்த நிலையில், அதையும் தாண்டி மீட்புப் பணிகள் நடைபெற்றன. சுமார் 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
புகைப்படங்கள் வெளியீடு: இதுவரை இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 800க்கும் மேற்பட்டோர் அருகே இருந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சுமார் 56 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு ஒடிசாவில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே உயிரிழந்தவர்களை உறவினர்கள் எளிதாக அடையாளம் காட்ட முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது உயிரிழந்தவர்கள் புகைப்படங்கள் http://ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதில் உயிரிழந்தோரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்ற பயணிகளின் உறவினர்கள், இந்தத் தளத்தில் சென்று தேவையான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி நடந்தது: இதுவரை இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இருப்பினும், நேற்றிரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரசுக்கு பச்சை சிக்னல் கொடுத்து உடனடியாக ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குள் ரயில் வந்துவிடவே அது மெயின் டிராக்கில் செல்லாமல் லூப் டிராக்கில் வந்துள்ளது. அங்கே இருந்த சரக்கு ரயிலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸின் என்ஜின் சரக்கு ரயிலுக்கு மேலே உள்ளது இதையே காட்டுகிறது.
இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சுமார் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. அதில் சில பெட்டிகள் பக்கத்தில் இருந்த தண்டவாளத்திலும் விழுந்துள்ளன. அப்போதே அங்கே வந்த மற்றொரு ரயிலான யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயில் இந்தப் பெட்டிகளில் மோத அதுவும் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications