Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்பார்த்தது பெட்ரோல், டீசல் விலை குறைப்பு! ஆனா கிடைச்சது வரி உயர்வு! புலம்பும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டிரம்பின் வரி அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிந்து வந்தது. இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கு கீழ் சென்றுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.

சர்வதேச அளவில் இப்போது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று மட்டும் 3 சதவிகிதத்திற்கு மேல் சரிந்துள்ளது.. அதாவது ஒரே வாரத்தில் 10% மேல் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

petrol diesel central govt

சர்வதேச சந்தை

சர்வதேச அளவில் வர்த்தகமாகும் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் சுமார் 4% குறைந்து $63.21ஆக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை இந்தளவுக்குக் குறைவது இதுவே முதல்முறையாகும். அதேபோல அமெரிக்காவில் வர்த்தகமாகும் மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $59.79 ஆகச் சரிந்துள்ளது..

கச்சா எண்ணெய் சரிவு மத்திய கிழக்கு நாடுகளைப் பெரியளவில் பாதிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிவதால் சவுதி அரேபியா மே மாதம் முதல் ஆசிய நாடுகளுக்குப் பேரலுக்கு $2.30 வரை விலையை மேலும் குறைத்துள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கு கீழ் போவது உறுதியாகியுள்ளது.

காரணங்கள் என்ன

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. முதலில் டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி. உலகின் பல்வேறு நாடுகள் மீதும் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியைக் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதனால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படும். சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படும்போது எரிபொருள் தேவையும் குறையும். இது கச்சா எண்ணெய் குறைய முதல் காரணம். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கச்சா எண்ணெய் உற்பத்தி திடீரென அதிகரித்தது. தேவை குறைந்த நேரம் பார்த்து உற்பத்தி அதிகரித்தே இந்தளவுக்கு விலை சரிய முக்கிய காரணமாக இருக்கிறது.

மக்கள் எதிர்பார்ப்பு

அதேநேரம் கச்சா எண்ணெய் விலை சரிந்து வந்ததால் நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை சரியும் என்றே மக்கள் எதிர்பார்த்தனர். சென்னையில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.93க்கும், டீசல் ஒரு லிட்டர் ₹92.52க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை படுவேகமாக சரிந்து வருவதால் நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். நெட்டிசன்கள் பலரும் அதையே பதிவிட்டு வந்தனர்.

வரி உயர்வு

ஆனால், இன்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத வகையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறையும் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில், அதற்கு நேர்மாறாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை குறையும் என பார்த்தால் வரி உயர்த்தப்பட்டுள்ளது ஏமாற்றத்தை தருவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

அதேநேரம் இந்த வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. அதாவது மத்திய அரசின் கூடுதல் வரிக்குப் பதிலாக பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் குறைத்துக்கொள்ளும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு மாற்றம் இருக்காது. எனவே, இப்போது நாம் வாங்கும் பெட்ரோல், டீசல் விலையே மாற்றமின்றி தொடரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+