ஓமிக்ரான் பாதிப்பு- டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை- அமலுக்கு வரும் அதிரடி கட்டுப்பாடுகள்!
டெல்லி: ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹோட்டல்கள், பார்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி; பள்ளி, கல்லூரிகள் திரையரங்குகள் மூடப்படும் எனவும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் திங்கட்கிழமை இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு
கடைகள், மால்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் உணவகங்கள் இயங்க வேண்டும்
உணவகங்கள் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் இயங்கும்.
மதுபான பார்களில் 50% வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்
மதுபான பார்கள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதி
ஹோட்டல்கள் திறந்திருந்தாலும் கருத்தரங்குகள் நடத்த அனுமதி இல்லை
டெல்லி மெட்ரோ ரயில்கள் 50% பயணிகளுடன் மட்டும் இயங்கும்
ஆட்டோக்கள், டாக்ஸிகளில் 2 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்
சலூன்கள், அழகுநிலையில் திறந்து இருக்கும்
திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி
தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி
டெல்லியில் எவையெல்லாம் மூடப்படும்?
திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மூடப்படும்
ஆடிட்டோரியங்கள் மூடப்படும்
ஸ்பா, ஜிம்கள், யோகா மையங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்படும்
பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் மூடப்படும்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications