மொத்தம் 71 வருடங்களில்.. 11 பெண் நீதிபதிகளே சுப்ரீம்கோர்ட்டில் நியமனம்.. என்ன சொல்கிறது ஆய்வு?

: நீதித்துறையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுப்ரீம்கோர்ட் உருவாகி இந்த 71 வருட காலத்தில், இதுவரை 11 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர்.. அதிலும் 3 பெண் நீதிபதிகள் கடந்த மாதம்தான் நியமிக்கப்பட்டவர்கள்..!

சுப்ரீம்கோர்ட்டில் இப்போதைக்கு 11 பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள்.. இதில் கடந்த மாதம் 3 பேர் பதவி ஏற்றனர்.. இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள் நியமிக்கப்படுவதும் இதுதான் முதல்முறை.

இந்த 3 பேரில் ஒருவர் கர்நாடக மாநில நீதிபதியான நாகரத்னா ஆவார்.. இவர் 2027-வரை சுப்ரீம் கோர்ட்டில் இனி பொறுப்பில் இருப்பார்.. ஒருவேளை அவர் தலைமை நீதிபதியாக வந்தால், இந்திய வரலாற்றிலேயே முதல் பெண் தலைமை நீதிபதியாக நாகரத்னாவே அந்த சிறப்பை பெறுவார் என்பது கூடுதல் தகவல்.

 சிறப்பு

சிறப்பு

எனினும், சுப்ரீம்கோர்ட்டிலும் சரி, ஹைகோர்ட்களிலும் சரி, பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்தே காணப்பட்டு வந்துள்ளது.. அதேசமயம், கீழமை நீதிமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஒப்பிடும்போது, இங்கு சற்று சிறப்பாகவும், உயர்வாகவுமே இருக்கிறது.

நியமனம்

நியமனம்

சுப்ரீம் கோர்ட் 71 வருடங்களாக உள்ளது.. 1950-ல் தான் உருவாக்கப்பட்டது.. ஆனால், பெண்களின் பங்களிப்பு அவ்வளவாக இருப்பதில்லை.. நீண்ட காலமாக அதாவது சுப்ரீம் கோர்ட் ஆரம்பித்து 30 வருடங்களுக்கு பெண் நீதிபதிகளே நியமிக்கப்படவில்லை.. 39 வருடங்கள் கழித்துதான் முதல் பெண் நீதிபதியே நியமனம் செய்யப்பட்டார்..

 பாத்திமா பீவி

பாத்திமா பீவி

அவர்தான் 1989-ம் ஆண்டு முதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட பாத்திமா பீவி ஆவார். இவர்தான் நம்முடைய ஆளுநராகவும் அப்போது பதவி வகித்தவர். இதற்கு பிறகு 1989 முதல் 1994 வரை சுஜாதா வி.மனோகர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்... பிறகு நீதிபதி ருமா பால் நியமிக்கப்பட்டார்... சுஜாதா 5 வருடமும், ருபா பால் 6 வருடமும் நீதிபதிகளாக பணியாற்றினர். ..

 சுதா மிஸ்ரா

சுதா மிஸ்ரா

அதோடு சரி, 10 வருட காலமாக பெண் நீதிபதியே யாரும் சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்படவில்லை... 2010-ல் தான் கியான் சுதா மிஸ்ராவும், 2011-ல் ரஞ்சனா பிரகாஷ் தேசாயும் நியமிக்கப்பட்டனர். பிறகு 2014-ல் ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டார்.. இவர் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.. 2018-ல் இந்து மல்ஹோத்ரா நீதிபதியாக பதவியானார்.. இவருக்கு ஒரு சிறப்பு உண்டு..

 பிரதிநிதித்துவம்

பிரதிநிதித்துவம்

அதாவது, பார் கவுன்சிலிலிருந்து சீனியரான இவர், நேரடியாகவே சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.. இப்படி நீதிபதியாவதில் 2வது நபர் இவர் ஆவார். சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 71 வருடங்களில் 256 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதில், 11 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள். அதாவது 4.2 சதவீதம் மட்டுமே பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது..

 சுப்ரீம்கோரட்

சுப்ரீம்கோரட்

இப்போது சுப்ரீம்கோர்ட்டில் 33 நீதிபதிகள் பதவியில் இருக்கும் நிலையில் 4 பேர் பெண் நீதிபதிகள்.. இப்போது 4.2 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக பெண்களுக்கு பிரதிநிதித்துவம் உயர்ந்துள்ளது. ஹைகோர்ட்களில் இதைவிட குறைவான பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உள்ளது.. நாட்டில் உள்ள ஹைகோர்ட்களில் நீதிபதிகள் எண்ணிக்கையில் 11 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள் இருக்கிறார்களாம்..

 புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

இதில் 5 ஹைகோர்ட்களில் அதாவது, மணிப்பூர், மேகாலயா, பாட்னா, திரிபுரா, உத்தரகாண்ட் போன்ற ஹைகோரட்களில் பெண் நீதிபதிகளே இல்லையாம்.. இதனால், 6 ஹைகோர்ட்களில் பெண் நீதிபதிகள் பங்கு 10 சதவீதத்துக்கும் மிக குறைவுதான் என்கிறார்கள்.. டெல்லி, சென்னை, சிக்கம் ஹைகோர்ட்களில் மட்டுமே, பெண் நீதிபதிகள் சதவீதம் 20 முதல் 25 சதவீதம்வரை இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகின்றன.

 பெண் நீதிபதிகள்

பெண் நீதிபதிகள்

இதில் ஒரு மகிழ்வான விஷயம் என்னவென்றால், பெண்களின் பங்களிப்பும் பிரதிநிதித்துவம் அதிகமாக இருப்பது கீழமை கோர்ட்களில்தானாம்.. 2017-ல் கிடைத்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில், கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளில் 28 சதவீதம் பெண் நீதிபதிகள் என்றும், இதில் பிஹார், ஜார்க்கண்ட், குஜராத்தில் 20 சதவீதத்துக்கும் குறைவாக பெண் நீதிபதிகள் பதவியில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

 நியமனம்

நியமனம்

அதேபோல, நம் தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 37 சதவீதம் பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள்... அதிகபட்சமாக மேகாலயாவில் 73 சதவீதமும், கோவாவில் 65.91 சதவீதமும், சிக்கிமில் 64 சதவீதமும், தெலங்கானாவில் 44 சதவீதமும், தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் தலா 37 சதவீதமும், கேரளாவில் 33 சதவீதமும், கர்நாடகாவில் 28 சதவீதமும் பெண்கள் நீதிபதியாக உள்ளனர் என்று அப்புள்ளி விவர தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+