ஐ.ஐ.டி. நிறுவனங்களில் 12% இடஒதுக்கீடு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் முதன்மையான ஐ.ஐ.டி.களில் 40% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணி நியமனங்கள் குறித்து லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அளித்த பதிலின் முக்கிய அம்சங்கள்:
23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் மொத்தம் 6,511 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் 4,370 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இடஒதுக்கீடு என்ன?
மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%; உயர் ஜாதி ஏழைகளுக்கு 10%; தலித்துகளுக்கு 16.6%; பழங்குடியினருக்கு 7% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

12% இடஒதுக்கீடு
இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 59.5% பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஐ.ஐ.டிகளில் 12% இடஒதுக்கீடு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை நிலவரம்
உதாரணமாக மும்பை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் 3.8% பணியிடங்கள்தான் இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பட்டிருக்கிறது. ஆனால் ஆதிக்க ஜாதியினருக்கு 96% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதேபோல் 6.5%தான் இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை ஐஐடி
சென்னை ஐ.ஐ.டி.யில் 88% இடங்கள் ஆதிக்க ஜாதியினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் காலி இடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ரமேஷ் பொக்ரியால் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications