நோ ‛கேஷ்’.. டிசம்பரில் யுபிஐ மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யணும்.. பிரதமர் மோடி அழைப்பு.. ஏன்?
டெல்லி: அடுத்த மாதம் (டிசம்பர்) முழுவதும் பணம் கொடுப்பதற்கு பதில் யுபிஐ பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதன் அனுபவங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2014 முதல் ‛மான் கீ பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் நாட்டின் வளர்ச்சி பற்றி பேசும் பிரதமர் மோடி சேவைகளில் ஈடுபடும் நபர்களை பாராட்டியும் வருகிறார். இந்நிலையில் தான் மான் கீ பாத்தின் 107 வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த வேளையில் அவர் டிஜிட்டல் இந்தியா குறித்தும் யூபிஐ பணப்பரிவர்த்தனை பற்றியும் பேசினார். அப்போது வரும் டிசம்பர் மாதம் முழுவதும் யூபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
கழிவறை கழுவி ஏழை குழந்தைகளுக்கு உதவி.. கோவை லோகநாதனை மான் கீ பாத்தில் பாராட்டிய மோடி! யார் இவர்?
இந்தியாவில் யுபிஐ மூலம் நடக்கும் பணபரிவர்த்தனை என்பது கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளது. இது வரும் மாதத்தில் அதிகரிக்க வேண்டும். இதனால் வரும் (டிசம்பர்) மாதம் முழுவதும் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் யூபிஐ-யை பயன்படுத்த வேண்டும். அதில் கிடைக்கும் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
‛166 பேர் பலி’’.. 15 ஆண்டுக்கு முன் மும்பை 26/11 தாக்குதல் நடந்தது எப்படி? கலங்கிய பிரதமர் மோடி
மேலும் தொடர்ந்து 2வது முறையாக தீபாவளியின்போது மக்கள் கைகளில் பணம் வைத்து செலவழிப்பதை குறைத்து யுபிஐ பணபரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் மக்கள் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகளவில் நம்பி இருப்பது உறுதியாகி உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ஒரு மாதம் முழுவதும் யூபிஐ தவிர வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும்’’ என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications