Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஆர் சைலன்ட் மூவ்.. ‘சென்ட்டிமென்ட்’ - 2 விஷயங்கள்.. டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி ‘பளிச்’ மூவ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : அதிமுக மோதல் விவகாரத்தில் ஓபிஎஸ் கை ஓங்கி வரும் நிலையில், கட்சியின் உரிமைக்காக டெல்லியில் காய்நகர்த்தி வருகிறார் ஓ.பி.ரவீந்திரநாத். அதிமுக டெல்லி அலுவலகத்தையும், ஜெயலலிதா பயன்படுத்திய காரையும் தங்கள் வசம் கொண்டு வருவதற்கான வேலைகளில் ஓபிஆர் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக விவகாரம் பல்வேறு சுற்றுகளைக் கொண்ட போட்டி போல நீண்டு வருகிறது. முதல் சுற்றில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து ஜெயித்து வந்தது.

அடுத்து இரண்டாவது சுற்றில் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. ஈபிஎஸ் தரப்பில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் அணிக்குத் தாவி வருகின்றனர்.

இனி அடுத்த சுற்றில், பொதுக்குழு வழக்கு மேல்முறையீட்டு வழக்கு யாருக்கு சாதகமாக அமையப்போகிறது என்பதைப் பொறுத்து அவர்களின் கை ஓங்கும் என்று கூறப்படுகிறது.

அதிகாரப் போட்டி

அதிகாரப் போட்டி

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்ததைத் தொடர்ந்து, ஈபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ். ஈபிஎஸ் அதனை ஏற்காத நிலையில், ஈபிஎஸ் தரப்பின் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது ஓபிஎஸ் தரப்பு. கட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்ற இரு தரப்பினரும் முட்டி மோதி வருகின்றனர். அந்தவகையில் டெல்லியில் உள்ள அதிமுக சொத்துகளைக் கைப்பற்றும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளாராம் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்.

டெல்லியில் அதிமுக அலுவலகம்

டெல்லியில் அதிமுக அலுவலகம்

டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்காக அதிமுகவுக்கு 2010ஆம் ஆண்டில் மத்திய அரசு நிலம் ஒதுக்கியது. அதிமுகவுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதும், கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் வேகமெடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது டெல்லி சென்று அதிமுக அலுவலக கட்டிடப் பணிகளைப் பார்வையிட்டார். அதன்பிறகு, பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், விரைவில், இந்த அலுவலகம் திறக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. இதற்கிடையேதான் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் ஏற்பட்டு, கட்சியே இரண்டாகப் பிளவுபட்டது.

 தலைமை அலுவலகம்

தலைமை அலுவலகம்

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலை அடுத்து, தலைமை அலுவலக சாவி ஈபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளார் ஓபிஎஸ். அந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, டெல்லி அதிமுக அலுவலகத்தைக் கைப்பற்றும் முயற்சியில் அதிமுகவின் ஒரே லோக்சபா எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

காய்நகர்த்தும் ஓபிஆர்

காய்நகர்த்தும் ஓபிஆர்

பாஜக தலைமையுடன் நெருக்கம் காட்டி வரும் பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, டெல்லி அதிமுக அலுவலகத்தை தங்கள் வசப்படுத்த தீவிரமாக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக பாஜக மேலிடத் தலைவர்களுடனும் ஓபி.ரவீந்திரநாத் பேசியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் கார்

ஜெயலலிதாவின் கார்

மேலும், ஜெயலலிதாவின் காரையும் தங்கள் வசம் கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகிறது ஓபிஎஸ் தரப்பு. ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாக இருந்தபோது, டெல்லியில் மாருதி 800 காரை பயன்படுத்தினார். அதன் பின்னர், தமிழக அரசியலில் கோலோச்சியதால் டெல்லியில் ஜெயலலிதாவின் கார் பயன்படுத்தப்படவில்லை. அந்த கார் அதிமுக எம்.பியாக இருந்த மைத்ரேயன் வீட்டில் இருந்தது. அவரது பதவிக்காலம் முடிந்தபிறகு, டெல்லியில் உள்ள அதிமுக எம்.பி தம்பிதுரையின் வீட்டில் இருந்து வருகிறது.

தங்கள் வசம் கொண்டு வருவதற்கு

தங்கள் வசம் கொண்டு வருவதற்கு

அதிமுக டெல்லி அலுவலகத்தில், ஜெயலலிதா உபயோகித்த பொருட்களை கண்காட்சியாக வைக்க முடிவு செய்துள்ளனர். அப்போது ஜெயலலிதா பயன்படுத்திய மாருதி 800 காரையும் அங்கு வைக்க முடிவு செய்துள்ளனராம். இந்த நிலையில் தான், டெல்லி அலுவலகத்தையும், ஜெயலலிதா பயன்படுத்திய காரையும் தங்கள் வசம் கொண்டு வர டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார் ஓபி.ரவீந்திரநாத். ஜெயலலிதா பயன்படுத்திய கார் தங்களிடம் இருக்க வேண்டும் என ஓபிஎஸ் பெர்சனலாக விரும்புவதால், அதை மீட்பதற்கான திட்டங்களில் ஈடுபட்டுள்ளனராம்.

ஒரே எம்.பி

ஒரே எம்.பி

அதிமுகவுக்கு லோக்சபாவில் இருக்கும் ஒரே எம்.பியான ரவீந்திரநாத்தை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி, இதுபற்றி லோக்சபா சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பினார். இதற்கு, தன்னை ஈபிஎஸ் நீக்க முடியாது என ஓபிஆர் விளக்கம் அளித்தார். இதில் ஓபிஎஸ் தரப்பின் வேண்டுகோளே வென்றது. நாடாளுமன்றத்தில் ஓபி ரவீந்திரநாத் அதிமுக எம்.பியாகவே தொடர்கிறார். இந்நிலையில் தான் டெல்லியில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலையைக் காட்டி வருகிறார் ஓபிஆர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+