ஆபரேஷன் சிந்தூர் விவாதம்.. லோக்சபாவில் ஆவேசத்துடன் பேசிய ஆ ராசா.. பாஜக எம்.பிக்கள் கொடுத்த ரியாக்ஷன்
டெல்லி: லோக்சபாவில் இன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி ஆராசா, மத்திய அரசை கடுமையாக சாடினார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியது வெட்ககேடு என்று ஆ. ராசா கூறினார். ஆ. ராசா பேசும் போது இடையிடையே பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கத்தி கூச்சல் போட்டனர்.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் லோக்சபாவில் உரையாற்றினர்.

லோக்சபாவில் ஆ ராசா பேச்சு
எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தனர். இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அதேபோல், எதிர்க்கட்சி எம்பிக்களும் இந்த விவாதத்தில் பேசினர். திமுக எம்.பி ஆ ராசா இன்று உரையாற்றும் போது ஆவேசத்துடன் பேசினார். ஆ. ராசா கூறியதாவது:-
எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகிறாரக்ள். 370 பிரிவை கொண்டு வந்த பிறகு காஷ்மீரில் துப்பாக்கி சத்தம் இருக்காது எனக் கூறினர். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறியது வெட்க கேடு. குறைந்தபட்சம் உங்கள் தலைவர் வாஜ்பாயின் வழிமுறைகளாவது பின்பற்றுங்கள்.
வாஜ்பாயையாவது பின்பற்றுங்கள்
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கந்தகார் கடத்தல் சம்பவம் நடைபெற்றது. போரை நிறுத்தியதாக அமெரிக்கா கூறியது வெட்க கேடு. பாகிஸ்தான் தாக்க போவதாக அமெரிக்க துணை அதிபர் கூறியது வெட்க கேடான விஷயம். இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது. பஹல்காம் தாக்குதல் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. கார்கில் போருக்கு பிறகு வாஜ்பாய் கமிஷன் ஒன்றை அமைத்தார். அந்த கமிஷனின் அறிக்கை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அதே பாரம்பரியத்தை பின்பற்றுவதாக கூறும் நீங்கள் அனைத்தையும் மறைக்கிறீர்கள். நீங்கள் ஜனநாயகத்துடன் நடந்து கொள்கிறீர்களா? குறைந்தபட்சம் உங்கள் தலைவர் வாஜ்பாயையாவது பின்பற்றுங்கள். கார்கில் போருக்கு பின் வாஜ்பாய் செய்தது போல நீங்கள் இப்போது செய்ய வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் குறித்து முரண்பட்ட செய்திகள் வெளியகியிருந்தன. ஆபரேஷன் சிந்துர் குறித்தும் இப்போதும் முரண்பட்ட செய்திகளை கூறுகிறீர்கள்.
மூலக்காரணம் காங்கிரஸ் தான்
ஜனநாயக முறையை பின்பற்றி அனைத்தையும் வெளிப்படையாக விவாதியுங்கள்" என்றார். ஆ. ராசா பேசும் போது இடையிடையே பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கத்தி கூச்சல் போட்டனர். எனினும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஆ ராசா எம்பி ஆவேசத்துடன் பேச்சை தொடர்ந்தார்.
முன்னதாக பேசிய அமித்ஷா, "பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாதத்திற்கும் மூலக்காரணம் காங்கிரஸ் தான். காங்கிரஸ் மட்டும் பிரிவினையை ஏற்காமல் இருந்து இருந்தால், பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருந்து இருக்காது. கடந்த 2002 ஆம் ஆண்டு அடல் ஆட்சியின் போது தான் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தது" என்று பேசினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications