தாய் மண்ணே வணக்கம்! இந்திய மண்ணிலிருந்தே பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தரைமட்டமாக்கிய முப்படை!
டெல்லி: பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிப்பதற்காக இந்திய ராணுவத்தினர் சொந்த மண்ணில் இருந்தபடியே தொலை தூரம் சென்று துல்லியமாக தாக்கும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்திய மண்ணில் இருந்து கொண்டே பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் 2016 ஆம் ஆண்டு உரி தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததை விட தற்போது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வலிமையான தாக்குதல் என சொல்லப்படுகிறது.

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் 26 பேரை காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்றனர். தங்கள் மனைவி, கணவர், குழந்தைகளுடன் விடுமுறையை கழிக்க பஹல்காம் வந்தவர்கள் கண்ணீருடன் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டது.
உலக நாடுகள்
இது இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை அதிர வைத்தது. இதற்கு பதிலடி கொடுப்போம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதைத்தான் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் விரும்பினர்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்
நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என கேட்டனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது. இந்தியா போர் ஒத்திகை நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது. டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போர் ஒத்திகை நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டது.
இருள்
இதில் இருட்டான இடத்தில் எப்படி தாக்குதல் நடத்த வேண்டும், வான் வழியாக எப்படி நடத்துவது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் எந்த மாதிரியான தாக்குதலை நடத்தலாம் என்பது குறித்து ஒத்திகை நடத்துவதாக சொல்லப்பட்டது.
போர் கால ஒத்திகை
நேற்றும் சில இடங்களில் போர் கால ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தானின் பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமான படையின் மிகப் பெரிய விமான ஒத்திகை நடத்தப்படும் என சொல்லப்பட்டது. அதாவது இன்று இரவு 9.30 மணி முதல் நாளை மறுநாள் காலை 3 மணி வரை பொது விமான சேவை பாதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர்
ஆனால் இன்று நள்ளிரவு 1.44 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
தொலைதூர தாக்குதல்
தொலைதூரத்தில் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை கொண்டு இந்தியாவின் முப்படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டன. மசூர் அஸாதின் மதரசா முற்றிலும் அழிக்கப்பட்டது.
உளவுத் துறை
உளவுத் துறை கொடுத்த தகவல்களை கொண்டு இந்திய மண்ணில் இருந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா நடத்திய தாக்குதலில் பொதுமக்களோ அந்தநாட்டு ராணுவமோ பாதிக்கப்படவில்லை. அது போல் இடிந்து விழுந்தவை எல்லாம் தீவிரவாதிகள் தங்கியிருந்த முகாம்கள்தான்.

பாகிஸ்தான் எல்லை
இதுகுறித்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், போர் ஒத்திகை நிகழ்வு ராஜஸ்தானின் பாகிஸ்தான் எல்லையில் இன்று நடத்துவதாக இருந்தது. ஆனால் தீவிரவாதிகள் தூங்கி கொண்டிருந்த நேரம் பார்த்து அவர்களை திசை திருப்பி விட்டு இந்திய ராணுவம் இந்த வலிமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
சொந்த மண்ணில்
இந்த திடீர் தாக்குதலால் அவர்களால் தப்பிக்க இயலாது. இந்த தாக்குதல் நிகழ்வு முப்படைகளும் இணைந்து நடத்தியதாக சொல்லப்படுகிறது. பாகிஸ்தானுக்குள் ஊடுருவாமல் சொந்த மண்ணில் இருந்து கொண்டே இந்தியா, தான் குறித்த 9 இலக்குகளையும் துல்லியமாக அழித்துவிட்டது. நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது. ஜெய் ஹிந்த் என இந்திய ராணுவம் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications