மோடி, அமித்ஷாவை அதிரவைத்த ஒரே தேர்தல் ஆணையர்.. யார் இந்த ‘அசோக் லவாசா’? என்ன ஆச்சு தெரியுமா?
டெல்லி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக குற்றம்சாட்டிய ஒரே ஒரு தேர்தல் ஆணையர் அசோக் லவாசாதான். இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தமது பதவியையே ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடியை எதிர்கொண்டவர் அசோக் லவாசா.
18-வது லோக்சபா தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்றது. 2-வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26-ந் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரங்கள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளன. புனிதமான நவராத்திரி மாதத்தில் அசைவம் சாப்பிடுகிறார்களே என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இது சர்ச்சையானது.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சியில் உங்கள் செல்வத்தை எல்லாம் பறித்து முஸ்லிம்களிடம் கொடுத்துவிடுவார்கள்; காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி இப்போது உங்கள் வருமானம், உங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என்கிறது. பெண்களின் நகைகளைப் பறிக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.. மாத சம்பளம் பெறுவோர் வங்கியில் எவ்வளவு முதலீடு செய்துள்ளனர், எத்தனை வாகனங்கள் வைத்திருக்கிறார்கள், எவ்வளவு நிலம் வைத்திருக்கிறார்கள் என்பது குறித்தும் கணக்கெடுக்கப் போகிறதாம். உங்களின் சொத்தை பறிமுதல் செய்யப் போகிறார்கள். வீடு இருக்கா: நீங்கள் யாராவது உங்கள் கிராமத்தில் பரம்பரை வீடு வைத்திருந்தால், நகரத்தில் ஒரு பிளாட் வாங்கினால், அதில் ஒரு வீட்டைக் காங்கிரஸ் பறித்துவிடும். உங்களுக்கு ஏற்கனவே சொந்த வீடு இருப்பதால், உங்களுக்கு வேறு வீடு தேவையில்லை என்றும் காங்கிரஸ் கூறுகிறது என பேசியிருந்தார்.
பிரதமர் மோடி வெளிப்படையாக மதம் சார்ந்து பேசியிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி மதத்தை அடிப்படையாக வைத்து பிரதமர் மோடி பகிரங்கமாக பிரசாரம் செய்வது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா இதேபோல போல தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் குவிந்தன. இதனடிப்படையில் மோடியின் பேச்சு குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையர்கள் குழு அமைக்கப்பட்டது. 3 பேர் கொண்ட இந்த தேர்தல் ஆணையர்கள் குழுவாது மோடியின் பேச்சில் விதிமீறல் இல்லை என்றது. ஆனால் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த அசோக் லவாசா,, இந்த முடிவை நிராகரித்தார். பிரதமர் மோடி பேசியது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் என்றார். இருந்த போதும் பெரும்பான்மை என்ற அடிப்படையில் 2 தேர்தல் ஆணையர்களின் கருத்து இறுதி முடிவாக ஏற்கப்பட்டது. அசோக் லவாசாவின் மோடிக்கு எதிரான நிலை அப்போது பேசு பொருளானது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அசோக் லவாசா என்ன மாதிரியான கருத்துகளை மோடிக்கு எதிராக தெரிவித்தார் என்பதை பகிரங்கப்படுத்தவும் தேர்தல் ஆணையம் மறுத்தது. நாட்டை உலுக்கிய பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு பட்டியலில் அசோக் லவாசாவின் போனும் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இத்தகைய நெருக்கடிகளால் அசோக் லவாசா, தமது பதவிக் காலம் முடிவதற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்தார். அண்மையில் கூட தேர்தல் பத்திரம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய பாஜக அரசை விமர்சித்திருந்தார் அசோக் லவாசா.
தற்போது பிரதமர் மோடி, தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அசோக் லவாசாவின் செயல்பாடுகளை மீண்டும் பேசுபொருளாக்கி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications