Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானி விவகாரம்- நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்

அதானி குழும மோசடிகள் குறித்து விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதானி குழும மோசடிகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதானி குழும விவகாரங்களில் மத்திய பாஜக அரசின் பங்கு என்ன? அதானி குழும மோசடிகளுக்கு உடந்தையாக யார் இருந்தது? என்கிற கேள்விகளை முன்வைத்தும் அதானி குழும மோசடிகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் நாடாளுமன்ற இரு சபைகளையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர்.

Opposition parties demand JPC probe pertaining to Adani row

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரும் அதானி விவகாரத்தை எழுப்பினர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் அதானி விவகாரம், நாடாளுமன்ற இரு சபைகளிலும் எதிரொலித்தது. நாடாளுமன்ற வளாகம் காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி, பிஆர்எஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகியவற்றின் எம்பிக்கள் பதாகைகளுடன் அதானி குழும மோசடிகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மக்களவையில் மாலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசினார்.

இரு அவைகளிலும் குடியரசுத் தலைவரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உரை நமது தேசத்திற்கே வழிகாட்டுகிறது. அவருடைய உரை பெண்கள் சக்திக்கு உத்வேகம் அளித்து, இந்தியாவின் பழங்குடியின சமுதாயத்திற்கு தன்னம்பிக்கையை வளர்த்து பெருமை கொள்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. நமது நாடு தீர்மானத்துடன் கூடிய வெற்றி பெறுவதற்கு விரிவான செயல்திட்டத்தை குடியரசுத் தலைவர் அளித்துள்ளார் என்று பிரதமர் கூறினார்.

சவால்கள் வரலாம், ஆனால் 140 கோடி இந்தியர்களின் உறுதிப்பாட்டின் மூலம் நமது தேசம் அனைத்து தடைகளிலிருந்தும் மீண்டு வரும் என்று பிரதமர் தெரிவித்தார். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது நம்நாடு அதனை எவ்விதம் எதிர்கொண்டது மற்றும் போர்க்கால சமயங்களில் ஒவ்வொரு இந்தியரும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அதுபோன்ற கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

Opposition parties demand JPC probe pertaining to Adani row

உலக அளவில் இந்தியாவின் மீது நேர்மறையான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் உலக நிலைப்பாடு, இந்தியாவின் வளரும் திறன், இந்தியாவில் உருவாகும் புதிய வாய்ப்புகள் ஆகியவை இந்த நேர்மறையான ஸ்திரத்தன்மைமிக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் கூறினார். நாட்டின் நம்பிக்கை சூழல் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் நிலையான அரசு உள்ளதாகத் தெரிவித்தார். கட்டாயப்படுத்துதல் மூலம் சீர்திருத்தங்கள் நடைபெறவில்லை என்று கூறிய அவர், அவை நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் செழுமையை உலக நாடுகள் காண்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பாக 2004- ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஊழல்கள் நடைபெற்றதாகவும், அதே நேரத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதாகவும் இந்தியப் பொருளதாரம் சரிவடைந்து இந்தியர்களின் குரல் பலவீனமாக இருந்தது என்றும் கூறினார். அக்காலகட்டம் வாய்ப்புகளில் ஏற்பட்ட துன்பம் என்ற நிலை நிலவியதாகத் தெரிவித்தார்.

நாடு தற்போது முழு தன்னம்பிக்கையுடன் இருப்பதாகவும், அதனுடைய கனவுகளும், உறுதிப்பாடுகளும். நிறைவேறி வருவதாகவும், உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் உற்று நோக்கியுள்ளதாகவும், இதற்கு இந்தியாவின் ஸ்திரத்தன்மையும், சாத்தியங்களும் காரணம் என்று குறிப்பிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, இந்தியா 10 ஆண்டுகளில் இழந்ததாக அவர் கூறினார். தற்போது இது இந்தியாவின் 10 ஆண்டுகாலம் என்று மக்கள் அழைப்பதாகத் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குவதாகக் குறிப்பிட்ட பிரதமர், வலிமையான ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் வழிவகுக்கும் என்றும் இது தூய்மையாக்கலின் ஒரு அங்கம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் இப்போது ஆரோக்கியமான விமர்சனங்களுக்குப் பதிலாக சில கட்டாயப்படுத்தப்பட்ட விமர்சனங்களைத் தெரிவிப்பதாக கூறினார். கடந்த 9 ஆண்டுகளில், ஆரோக்கியமான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலாக கட்டாயப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் மூலம் முதன் முறையாக அடிப்படை வசதிகளைப் பெற்றுள்ள மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கூறினார். பரம்பரை ஆட்சியின் வாரிசாக இல்லாமல் தாம் 140 கோடி இந்தியர்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். 140 கோடி இந்தியர்களின் ஆசீர்வாதங்களே என்னுடைய பாதுகாப்பு அரண் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் திட்டப்பயன்கள் சென்றடைவதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் மகளிர் சக்தி குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் மகளிர் சக்தியை வலுப்படுத்த எந்த முயற்சியும் ஈடுபடவில்லை என்றும் கூறினார். இந்தியாவின் தாய்மார்கள் வலுப்பெறும் போது மக்கள் வலுப்பெறுவதாகவும், மக்கள் வலுப்பெறும் போது, சமூகம் வலுவடைவதாகவும் இது நாட்டை வலுவடையச் செய்வதாகவும் தெரிவித்தார்.

நடுத்தர மக்களின் விருப்பங்களை அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அவர்கள் கௌரவத்துடன் வாழ வழி வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் குடிமக்கள் முழு நேர்மறை சிந்தனையுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், எதிர்மறை போக்கை எதிர்கொள்ளும் திறன் இந்திய சமூகத்திற்கு இருந்த போதிலும், இந்த எதிர்மறைப் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+