பதவியிழக்கும் ஜெகதீப் தன்கர்? ராஜ்யசபாவில் ‛இந்தியா’ கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம்! திடுக் வியூகம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா தலைவராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளார். இந்நிலையில் தான் அந்த பொறுப்பில் இருந்து நீக்க அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ராஜ்யசபாவின் எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி எம்பிக்கள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தால் என்ன நடக்கும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 2 சபைகள் உள்ளன. ஒன்று லோக்சபா. மற்றொன்று ராஜ்யசபா. இதில் லோக்சபா எம்பிக்கள் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். ராஜ்யசபா எம்பிக்கள் ஒவ்வொரு மாநில எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது லோக்சபா சபாநாயகராக பாஜகவின் ஓம்பிர்லா உள்ளார்.

ராஜ்யசபா தலைவராக எப்போதும் நம் நாட்டின் துணை ஜனாதிபதி தான் பொறுப்பு வகிப்பார். அந்த வகையில் தற்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜ்யசபா தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
அதன்பிறகு ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்பிறகு தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள், பிற விவாதங்கள் நடந்து வந்தன. வரும் 12ம் தேதி வரை நாடாளுமன்றம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்றுடன் முன்கூட்டியே பட்ஜெட் கூட்டத்தொடர் முடித்து கொள்ளப்பட்டது. முன்னதாக இந்த கூட்டத்தொடரில்ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி எம்பிக்கள் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஜெகதீப் தன்கரிடம் ‛இந்தியா' கூட்டணி எம்பிக்கள் சண்டைக்கு போயினர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களின் மைக்கை ஆப் செய்தது, எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பேச வாய்ப்பு மறுப்பது உள்ளிட்டவற்றால் ஜெகதீப் தன்கர் மற்றும் ராஜ்யசபா எம்பிக்கள் இடையே வார்த்தை போர் ஏற்பட்டு வருகிறது. மேலும் நேற்று முன்தினம் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டியபோது ஜெகதீப் தன்கர் வெளிநடப்பு செய்தார்.
அதன்பிறகு நேற்று அமிதாப் பச்சன் மனைவியான சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சனை, அமிதாப் பச்சன் பெயருடன் சேர்த்து கூறும் ‛தொனி' சரியில்லை என்று ஜெயாபச்சன் தெரிவித்தார். மேலும் அவர் ஜெகதீப் தன்கரிடம் சண்டைக்கு போனார். இதானல் ஜெயா பச்சன் - ஜெகதீப் தன்கர் இடையே வார்த்தை போர் வெடித்தது. அதன்பிறகு ஜெயா பச்சனுக்கு ஆதரவாக சோனியா காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் தான் ராஜ்யசபா தலைவராக உள்ள ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி கட்சி எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ஆலோசனையும் மேற்கொண்டுள்ளனர். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக நடக்கும் கூட்டத்தொடரில் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஜெகதீப் தன்கர் பதவி இழப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி பார்த்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற ராஜ்யசபாவில் இருக்கும் எம்பிக்களில் பாதிக்கு மேலான எம்பிக்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தற்போது ராஜ்யசபாவில் 237 எம்பிக்கள் மட்டுமே உள்ளன. 13 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் 237 எம்பிக்களின் அடிப்படையில் பார்த்தால் ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்ற 119 எம்பிக்களின் ஆதரவு என்பது வேண்டும். தற்போது பாஜகவுக்கு 87 எம்பிக்களும், பாஜக கூட்டணிக்கு 110 எம்பிக்களும் உள்ளனர்.
‛இந்தியா' கூட்டணியை பொறுத்தவரை மொத்தம் 87 எம்பிக்கள் உள்ளனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 26 எம்பிக்கள், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கு 13 எம்பிக்கள், ஆம்ஆத்மி, திமுகவுக்கு தலா 10 எம்பிக்கள் உள்ளனர். இதனால் ‛இந்தியா' கூட்டணி எம்பிக்களால் ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெற்றி பெற செய்ய முடியாது.
மாறாக பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகளை சேர்ந்த 28 எம்பிக்கள் உள்ளன. இவர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஜெகதீப் தன்கருக்கு சிக்கல் ஏற்படும். ஆனால் ‛இந்தியா' கூட்டணியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (11 எம்பி), பிஜூ ஜனதாதளம் (8 எம்பிக்கள்), பிஆர்எஸ் (4 எம்பிக்கள்), அதிமுக (3 எம்பிக்கள்), பகுஜன் சமாஜ் (1), எம்என்எப் (ஒரு எம்பி)உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைவது கடினமாகும். இருப்பினும் அரசியல எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது தான் ஜெகதீப் தன்கர் பதவி இழப்பாரா? இல்லையா? என்பது தெரியவரும்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications