தூக்கான் பறவைகளுக்கு மத்தியில் ஒரு பென்குயின் இருக்கு.. 13 செகண்டில் கண்டுபிடித்தா நீங்க ஜீனியஸ்!
டெல்லி: கண்களை குழுப்பும் செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தூக்கான் பறவைகளுக்கு மத்தியில் ஒரு பென்குயின் இருக்கிறது. 13 செகண்டுக்குள் மறைந்திருக்கும் இந்த பென்குயினை கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.
சமூக வலைத்தளத்தில் கண்களை குழப்பும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எப்போதும் டிரெண்ட் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன.
பார்ப்பவர்களின் கண்களை குழப்பமடையச் செய்து, மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஹிட் அடித்து விடுகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றால் ஒன்றுமில்லை.. நாம் மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும்... பார்க்கும் கோணங்களை மாற்றினாலோ.. அல்லது கூர்ந்து பார்த்தாலோ இன்னொரு தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இது போன்ற படங்கள் நமது கண்களை குழப்பி விடுகிறது. இதனால் இது போன்ற படங்கள் இணையத்தில் டிரென்ட் ஆகி வருகின்றன.

தலையை பிய்த்துக்கொள்ள வைக்கும்
சில நேரங்களில் தலையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு நம்மை யோசிக்க வைக்கும் என்றும் சொல்லலாம். இப்படி எளிதில் விடைகள் கிடைக்காது என்பதால் இல்யூஷன் படங்களை பலரும் தங்கள் நட்பு வட்டங்களுக்கு அனுப்பி அவர்களுடன் போட்டி போட்டு விடையை கண்டு பிடித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

பென்குயின் எங்கு இருக்கிறது
அந்த படத்தில் நிறைய தூக்கான் பறவைகள் உள்ளது. வரிசையாக உள்ள இந்த தூக்கான் பறவைகளுக்கு இடையே ஒரு பென்குயின் இருக்கிறது. தூக்கான் பறவைக்கும் பென்குயினுக்கும் சிறு வித்தியாசம் இருக்கும் வகையில் இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சரி அந்த பென்குயினை 13 செகண்டுக்குள் நீங்கள் கண்டுபிடிப்பது தான் இன்றைய சவால்.. ஓகே 13 செகண்ட் டைம் எடுத்துக்கோங்க.. பென்குயினை கண்டுபிடிங்க...

13 செகண்டில் கண்டுபிடித்தால்
13 செகண்டில் நீங்கள் இந்த பென்குயினை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே ஜீனியஸ் என்று சொல்லலாம். சரி கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்... மீண்டும் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.. படத்தை மீண்டும் உற்று கவனியுங்கள்... நிறைய தூக்கான் பறவைகள் சிவப்பு, பச்சை நிற தொப்பி அணிந்திருப்பது தெரியலாம்.. இது போல் ஒருசில தூக்கான்கள் கண்ணாடி.. டை.. என பல ஸ்டைல்களில் காணப்படுவதும் தெரியலாம்.. அது தான் பென்குயின் என நினைத்து பார்க்காமால் தேடினால் பென்குயின் கிடைக்கும்.

படத்தின் சரி பாதியில் வலது புறத்தில்
இப்போது தெரிகிறதா.. கண்டுபிடித்தால் சூப்பர்.. இப்போதும் தெரியவில்லை என்றால்... ஒவ்வொரு வரிசையாக பாருங்கள்.. படத்தின் சரி பாதியில் வலது புறத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்தி உற்று பாருங்கள்... தூக்கான் பறவையை போலவே சற்று மாறுபட்ட வடிவில் பென்குயின் இருப்பது தெரியும்.. இப்பவும் பென்குயினை கண்டுபிடிக்க முடியாவிட்டால் மேலே உள்ள படத்தில் பென்குயின் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. =












Click it and Unblock the Notifications