மே.வங்கம்:1000 பேர் திரண்டு ஆயுதங்கள், செங்கற்களால் அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதல்-அமலாக்கத்துறை
டெல்லி: மேற்கு வங்கத்தில் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை 1000 பேர் திரண்டு ஆயுதங்கள், லத்தி செங்கற்களால் கொடூரமாக தாக்கினர்; அவர்களின் உடைமைகளை பறித்து கொண்டனர் என அமலாக்கத்துறை இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் மாநில அமைச்சர் ஜோதி பிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா வீடுகளில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. இந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவுக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பாக சென்றனர்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற வாகனம் தாக்கப்பட்டது. அவர்களது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இத்தாக்குதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவப் படையினர் படுகாயமடைந்தனர். சிலருக்கு மண்டையும் உடைந்தது.
இச்சம்பவம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகம் தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் ரேசன் திட்ட முறைகேடு தொடர்பாக வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஷாஜஹான் சேக் என்பவருக்கு சொந்தமான 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நடைபெற்ற ஒரு இடத்தில் 800 முதல் 1000 பேர் வரை திரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகளையும் துணை ராணுவப் படையினரையும் கொலைவெறியோடு ஆயுதங்கள், லத்தி, கற்கள், செங்கற்களால் தாக்கினர். இதில் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் மிக மோசமாக படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ED was conducting searches on the three premises of Sahajahan Sheikh, Convenor of TMC, North 24 Parganas in case of PDS scam of West Bengal. During the searches. On one of the premises, ED team with CRPF personnels was attacked by 800-1000 people with an intention to cause death…
— ED (@dir_ed) January 5, 2024
மேலும் அதிகாரிகளின் லேப்டாப், பணப் பை உள்ளிட்டவைகளை பறித்துக் கொன்டும் திருடிக் கொண்டும் வன்முறை கும்பல் தப்பியது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாகனங்களையு மிக மோசமாக அந்த கும்பல் தாக்கியது. இவ்வாறு அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications