தூக்கு தண்டனை.. 5 வருட காலத்தில் 6 பேரின் கருணை மனுக்களை நிராகரித்த ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்
டெல்லி: இந்த 5 வருட காலத்தில், தன்னுடைய பதவி காலத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மொத்தம் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் விரைவில் முடிவடைய போகிறது.. இதையடுத்து, வருகிற 18-ந்தேதி புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
பொதுவாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு, அரசியல்சாசனத்தின் பிரிவு 72-ன் கீழ், மன்னிப்பு வழங்கவோ, அந்த தண்டனையை நிறுத்தி வைக்கவோ, அல்லது தண்டனையை குறைக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

ஜனாதிபதி
அதாவது, குற்றவாளி ஒருவருக்கு சுப்ரீம்கோர்ட் மரண தண்டனையை உறுதி செய்யப்பட்டுவிட்டால், அவருக்காக யார் வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் அலுவலகம் அல்லது உள்துறை அமைச்சகத்துக்கு கருணை மனு அனுப்பலாம்... சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஆளுநரிடமும் கருணை மனுவை சமர்ப்பிக்கலாம். அவர் அதை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார்... அல்லது குற்றவாளி சிறையில் இருந்து அதிகாரிகள், வழக்கறிஞர் அல்லது குடும்பத்தினர் மூலம் கருணை மனு அனுப்பலாம்.

குடியரசு தலைவர்
குடியரசுத் தலைவருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அனுப்பும் தகவல், அமைச்சரவையின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கேற்ப கருணை மனு மீது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது சட்டவிதி.. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரும் செயல்படுவார்.. அந்தவகையில் ராம்நாத் கோவிந்த்தும், இது தொடர்பான நிறைய நடவடிக்கைகளை தன்னுடைய பதவி காலத்தில் எடுத்துள்ளார்.. கடந்த 2017 ஜூலையில்தான் இவர் பதவியேற்றார்..

எரித்து கொன்றார்
இந்த 5 வருட காலத்தில், தன்னுடைய பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.. யார் அவர்கள்? பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகத்ராய். இவர் கடந்த 2006-ம் ஆண்டு, ராம்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தை சேர்ந்த விஜயேந்திர மகோத்தா மனைவி மற்றும் 5 குழந்தைகள் வீட்டுக்கு தீ வைத்து உயிரோடு எரித்து கொன்றுவிட்டார்.. இச்சம்பவம் தொடர்பாக ஜகத் ராய் கைதானார்..

ராம்நாத் கோவிந்த்
இது தொடர்பாக நடந்த வழக்கில், 2013-ம் ஆண்டு, செப்டம்பரில் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது... இதையடுத்து, ஜகத் ராய், ஜனாதிபதிக்கு தன்னுடைய கருணை மனு அனுப்பினார்... இந்த கருணை மனுவை தான் முதன் முதலாக ராம்நாத் கோவிந்த் பதவிக்கு வந்ததுமே நிராகரித்தார்.. இதற்கு அடுத்தபடியாக, 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்ஸில் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது...

விசாரணை
இது தொடர்பாக முகேஷ்சிங், வினய் சர்மா, அக்ஷய்குமார் சிங், பவன்குப்தா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாக இருந்த ராம்சிங், கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, திகார் ஜெயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்ற 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது... இவர்கள் 5 பேரும் தனித்தனியாக ஜனாதிபதிக்கு தொடர்ந்து கருணை மனுக்களை அனுப்பி கொண்டே இருந்தனர்.. இவர்களின் அனைத்து மனுக்களையும், 2020-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்...

தூக்கு தண்டனை
இதேபோல கடைசியாக 2006-ம் ஆண்டு தூக்கு தண்டணை பெற்ற சஞ்சய் என்பவரது கருணை மனுவையும் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். ஆக, இந்த 5 ஆண்டு காலத்தில், மொத்தம் 6 பேரின் கருணை மனுக்களை ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். இதுவரை, 1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன், 45 கருணை மனுக்களை நிராகரித்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜி அதிக மனுக்களை நிராகரித்துள்ளார்..

அப்துல்கலாம்
கடந்த 2012 முதல் 2017 வரை ஜனாதிபதியாக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி மொத்தம் 30 கருணை மனுக்களை நிராகரித்தார். 1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார். இதற்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் 2 மனுக்களையும், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 5 கருணை மனுக்களையும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications