டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷாக்.. கொரோனா "மைக்ரேஷன்".. ரயில் மோதி, நசுங்கி இறந்தவர்கள் 8,700 பேர்.. ஒரே வருடத்தில் நடந்த கொடுமை

: கடந்த வருடம் ரயில் மோதி இறந்தவர்களின் விவரம் வெயிடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த ஆண்டு ரயில் விபத்தில் மட்டும் 8,700 பேர் உயிரிழந்துள்ளனர்... இவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று லாக்டவுன் போட்டுவிடவும், அதிக அளவு இன்னல்களுக்கு ஆளானது புலம்பெயர் தொழிலாளர்கள்தான்..

5 மாதங்கள்... 8 நாடுகளின் சுகாதார துறை அமைச்சர்கள் பதவிக்கு ஆப்பு வைத்த கொரோனா! 5 மாதங்கள்... 8 நாடுகளின் சுகாதார துறை அமைச்சர்கள் பதவிக்கு ஆப்பு வைத்த கொரோனா!

வேலை நிமித்தமாக, இந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.. இதனால், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு குழந்தை குட்டிகளுடன் பயணமாகி சென்றனர்..

 கொடுமை

கொடுமை

கொளுத்தும் வெயிலில் சுருண்டு சுருண்டு மயங்கி விழுந்தனர்.. பசியால் காதடைத்து இறந்தே போயினர்.. பல பிஞ்சுகள் காலில் செருப்பில்லாமல் கதறியபடியே அழுது சென்றன.. கர்ப்பிணிகள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சாலைகளில் கண்ணீர் சிந்தினர்.. வயதானவர்கள், இளைஞர்கள் என வித்தியாசம் பாராமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

ரயில்

ரயில்

சாலைமார்க்கமாக மட்டுமில்லாமல், ரயில்வே தண்டவாளங்களிலும் நடையாய் நடந்து சென்றனர்.. அப்போது ரயில் மோதியும் பலர் உடல்நசுங்கி இறந்த கொடுமையும் நடந்தது.. அது குறித்த தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

விவரம்

விவரம்

மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் கவுர்.. இவர், கடந்த ஆண்டு ரயில் மோதி இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை ரயில்வே வாரியத்திடம் அதாவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்... இதற்கு ரயில்வே வாரியமும் பதிலளித்துள்ளது.. அதில், மாநில காவல்துறையிடம் கிடைத்த தகவல்களின்படி, கடந்த வருடம் நாடு முழுவதும் ரயில் மோதி 8,733 பேர் உயிரிழந்துள்ளனர்... 805 பேர் காயமடைந்தனர்... உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான்.

மரணம்

மரணம்

லாக்டவுன் போடப்பட்டுவிடவும், தண்டவாளம் வழியாக சொந்த ஊருக்கு நடந்து சென்றனர்.. சாலைவழியாக நடந்து செல்வதைவிடவும், ரயில்பாதை வரியாக நடந்து சென்றால், பயணம் குறைவானது என்பதாலேயே அப்படி நடந்து சென்றனர்.. அதுமட்டுமல்ல, இப்படி சென்றால், போலீசிடம் இருந்து தப்பித்து விடலாம் என்றும், கணக்கு போட்டனர்.

 சரக்கு ரயில்கள்

சரக்கு ரயில்கள்

மேலும் சாலை வழியாக சென்றால், வழிதவறிசெல்லக்கூடும், ஆனால், ரயில்வே பாதையில் அப்படி இல்லை.. வழிதவற வாய்ப்பில்லை.. அதுவும் இல்லாமல், லாக்டவுன் போடப்பட்டிருப்பதால், ரயில்களும் ஓடாது என்று நினைத்துவிட்டனர்.. பயணிகள் ரயில்தான் ரத்தானதே தவிர, சரக்கு ரயில்கள் ஓடிக் கொண்டுதான் இருந்தது அதனால்தான், சரக்கு ரயில்கள் மோதியே அத்தனை பேரும் இறந்துள்ளனர்.

 பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

கடந்த 4 வருடங்களை ஒப்பிடும்போது, இந்த பலி எண்ணிக்கை குறைவு என்கிறார்கள்.. அதாவது, 2016ல், 14 ஆயிரத்து 32 பேர், 2017ல், 12 ஆயிரத்து 838 பேர், 2018ல், 14 ஆயிரத்து 197 பேர், 2019ல், 15 ஆயிரத்து 204 பேர் ரயில் பாதைகளில் நடந்த விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்... ஆனாலும், தொற்று சமயத்தில், அதுவும் லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில், இந்த பலி எண்ணிக்கை என்பது ஷாக் தரும் செய்தி தான்..!

English summary
Over 8700 people died on tracks in 2020 Lockdown and many of them were migrants
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X