மோடியை கிண்டல் செய்ய நினைத்து, ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியிடம் மாட்டிக்கொண்ட ராகுல் காந்தி
Recommended Video
டெல்லி: ராகுல் காந்தி பொய்களை கூறும் கயவன் என்று குற்றம்சாட்டி, மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே சரமாரியாக விளாசியுள்ளார்.
ஆக்ஸ்போர்ட்டு டிக்ஷனரியில், Modilie என்ற வார்த்தை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் அர்த்தம், உண்மைகளை அடிக்கடி மாற்றுபவர் என்றும் கூறி, ஒரு புகைப்படத்தை அட்டாச் செய்து ட்வீட் வெளியிட்டிருந்தார் ராகுல் காந்தி.
இவர் கிண்டலுக்காக இவ்வாறு செய்தாரா, உண்மையிலேயே இப்படி ஒரு வார்த்தை சேர்ந்துவிட்டதா என்ற ஐயம் நெட்டிசன்களிடம் ஏற்பட்டது.
|
ஆக்ஸ்போர்டு மறுப்பு
இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் டிவிட்டுக்கு நேரடியாக பதிலளித்து ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ஆக்ஷ்போர்டு டிக்ஷனரி விளக்கம்
Modilie என்ற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள இந்த படம் போலியானது. எங்கள் டிக்ஷனரியில் இப்படி வார்த்தை இல்லை என விளக்கம் அளித்தது ஆக்ஸ்போர்டு. அவ்வளவுதான், பாஜக ஆதரவாளர்கள், அதை வைத்து, ராகுல் காந்தியை கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
|
கடும் விமர்சனம்
இந்த நிலையில்தான், அனந்த்குமார் ஹெக்டே வெளியிட்ட ட்வீட்டில், ராகுல் காந்தியை மென்ஷன் செய்து, கயவன் என குறிப்பிட்டுள்ளார். தனித்துவமான சர்வதேச முட்டாள் என்பதை ராகுல் காந்தி நிரூபித்து வருகிறார். எனவே, எல்லைகளை தாண்டியும் அவர் அதை நிரூபிக்கிறார். அவரது இந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அமேசிங்!! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரேடார் சர்ச்சை
மேக மூட்டம் இருக்கும்போது போர் விமானங்களை பாகிஸ்தானுக்குள் அனுப்பினால், கண்டுபிடிக்க முடியாது என நரேந்திர மோடி அளித்த பேட்டியை காங்கிரஸ் ஆதரவாளர்களும், நெட்டிசன்களும் கலாய்த்து தள்ளி வந்த நிலையில், பாஜகவினரால் தற்போது ராகுல் காந்தியின் இந்த ட்வீட் வைரலாக்க மாற்றப்பட்டுக் கொண்டு உள்ளது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications