74 வயதாகிறது.. தயவு செய்து என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்.. ப. சிதம்பரம் கோரிக்கை
Recommended Video
டெல்லி: எனக்கு 74 வயதாகிறது. என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள் என ப.சிதம்பரம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு செய்ததாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டப்பட்டார். பின்னர் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவரை கடந்த 30-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 30-ஆம் தேதி சிபிஐ காவல் முடிந்தவுடன் சிதம்பரம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணை
அப்போது ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 5 நாட்கள் நீட்டிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் "சிபிஐ காவலுக்கு எதிராக நாங்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் செப்.2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்றம்
இதனால் அதுவரை நான் சிபிஐ காவலிலேயே இருக்கிறேன்" என ப.சிதம்பரம் தரப்பு கூறியது. இதையேற்று அவர் செப்.2-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்றுடன் காவல் முடிவடைந்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிதம்பரம்
அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார். அப்போது அவர் அமலாக்கத் துறை முன்ஜாமீன் வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் தர வேண்டும்.

74 வயதாகிறது
இல்லாவிட்டால் கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என கபில் சிபல் வாதம் செய்தார். அப்போது ப. சிதம்பரமோ எனக்கு 74 வயதாகிறது. இந்த வழக்கை ஒத்திவைத்தால் நான் திகார் சிறைக்கு செல்ல நேரிடும்.

ஜாமீன் மனு
தயவு செய்து என்னை திகார் சிறைக்கு அனுப்பிடாதீர்கள் என சிதம்பரம் கேட்டார். அப்போது நீதிபதிகள், வரும் 5-ஆம் தேதி வரை ப. சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பக் கூடாது. அவர் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்.

சிபிஐ காவல்
அவ்வாறு தாக்கல் செய்யும் மனுவை கீழமை நீதிமன்றங்கள் உடனடியாக விசாரிக்க வேண்டும். ஒரு வேளை ஜாமீன் கிடைக்காவிட்டால் செப்.5-ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications