டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை எல்லாம் சொல்ல முடியாது.. ப.சி வழக்கில் சிபிஐக்கு கபில் சிபல் பொளேர்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிபிஐ கேட்ட எல்லா கேள்விக்கும் விசாரணையில் பதில் சொல்லிவிட்டார் என்று அவர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ப. சிதம்பரத்திற்கு ஆகஸ்ட் 30ம் தேதி வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ கோர்ட் உத்தரவு!

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிபிஐ கேட்ட எல்லா கேள்விக்கும் விசாரணையில் பதில் சொல்லிவிட்டார் என்று அவர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

    முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த வாரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

     P Chidambaram Case: We cant give the answer you want, Kapil Sibal reply to CBI

    இவருக்கு வழங்கப்பட்ட சிபிஐ காவல் நேற்று நிறைவு அடைந்ததை அடுத்து மீண்டும் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது. தற்போது ப. சிதம்பரத்திற்கு இந்த மாதம் 30ம் தேதி வரை சிபிஐ காவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இவர் வெளியே வந்ததும் கைது செய்ய அமலாக்கத்துறையும் முயன்று வருகிறது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் இன்று மதியத்தோடு நிறைவு பெறுகிறது. இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

    அதேபோல் சிபிஐ காவலுக்கு எதிரான மனு மீதும் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் ஆர்.எஸ் போபன்னா ஆகியோர் அமர்வு வழக்கை விசாரித்தது. இதில், ப. சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள்.

    இதில் கபில் சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி தங்களது வாதத்தில், சிதம்பரத்துக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. சிதம்பரத்தை விசாரணை செய்தது தொடர்பான விவரங்களை சிபிஐ தரப்பு தாக்கல் செய்யவில்லை. சீலிடப்பட்ட கவரில் ப. சிதம்பரத்திற்கு எதிராக சொல்லப்படும் எதையும் ஆதாரமாக எடுக்க முடியாது.

    இதுபோல சீலிடப்பட்ட ஆதாரங்களை தாக்கல் செய்த வழக்குகள் ஏற்கனவே பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ப. சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ப. சிதம்பரத்திடம் செய்யப்பட்ட விசாரணை குறித்த விவரமோ அறிக்கையோ தாக்கல் செய்யப்படவில்லை.

    மாயமான பணமா? ஆர்பிஐயிடம் மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி வாங்குவது ஏன்? அதிர வைக்கும் புகார்! மாயமான பணமா? ஆர்பிஐயிடம் மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி வாங்குவது ஏன்? அதிர வைக்கும் புகார்!

    அதை தாக்கல் செய்தால்தான் அவர் என்ன கேள்விகளை எதிர்கொண்டார், எந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்தார் என்பது தெரியும். இந்த வழக்கில் சில குற்றப்பிரிவுகள் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்துள்ளதாக கருதப்படும் நாளுக்கு பின் வந்த சட்டங்களை எல்லாம் கூட இதில் சேர்த்து இருக்கிறார்கள்.

    2007ல் நடந்ததாக கூறப்படும் குற்றத்திற்கு 2009ல் கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். செய்யாத குற்றத்தை வைத்து ஒருவரை எப்படி நீதிபதி ''பணமுதலை'' என்று குறிப்பிட முடியும். நான் பல கேள்விகளை கேட்கிறேன். சிபிஐ தரப்பு ஒரே ஒரு கேள்விக்காவது சரியாக பதில் அளிக்க வேண்டும்.

    ப. சிதம்பரம் தன்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டார். நான் கேள்வி கேட்பேன், நீங்கள் பதில் சொல்ல வேண்டும், ஆனால் நான் எதிர்பார்க்கும் பதிலைத்தான் சொல்ல வேண்டும் என்று சிபிஐ கேட்க முடியாது. நீங்கள் எதிர்பார்த்த பதிலை சொல்லவில்லை என்றால், பதிலே சொல்லவில்லை என்று அர்த்தம் ஆகுமா?, என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

    English summary
    P Chidambaram Case: We can't give the answer you want, Kapil Sibal reply to CBI in SC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X