சீனா ஆக்கிரமிப்பு- உண்டு, இல்லை என ஏன் மோடி அரசால் பதில் சொல்ல முடியவில்லை? வெளுக்கும் ப.சி.
டெல்லி: இந்திய நிலப்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு உண்டு- இல்லை என ஏன் மோடி அரசால் பதில் சொல்ல முடியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனா விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக சாடி வருகிறார் ப.சிதம்பரம். மோடியின் 5 ஆண்டு கால சீனா ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முடியுமா? என பாஜக தலைவர் ஜேபி நட்டாவை கேள்வி கேட்டிருந்தார் ப.சிதம்பரம்.

சீனா ஊடுருவல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துகளை ஜேபி நட்டா விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சிதம்பரம் கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும் ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சீன துருப்புகள் இந்திய எல்லையைத் தாண்டி ஊடுருவியிருக்கிறார்களா, இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்திருக்கிறார்களா என்று கேட்டால் அரசு தரப்பில் சீறுகிறார்கள், ஏன்? ஆஹா, இது தேசத் துரோகம் என்று குதிக்கிறார்கள், ஏன்?

2004-2014 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் போது இதே கேள்விகளை பாஜக பல முறை கேட்டார்களே, மறந்துவிட்டதா? ஐ மு கூட்டணியின் சீனா கொள்கையைக் கடுமையாக விமர்சித்தார்களே, அதுவும் மறந்துவிட்டதா?

ஒவ்வொரு முறையும் நாங்கள் பதில் சொன்னோம். ஊடுருவல் முயற்சி நடந்தது, ஆனால் முறியடிக்கப்பட்டது, 2004-2014 இல் இந்திய நிலப்பகுதியில் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பதில் சொன்னோம். உண்டு, இல்லை என்று திரு மோடி அரசால் ஏன் பதில் சொல்ல முடியவில்லை?
இவ்வாறு சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications