டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வயிற்று வலி.. திகார் சிறையிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம், வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் சிபிஐயால் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார் சிதம்பரம். செப்டம்பர் 5 முதல் டெல்லியின் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார் சிதம்பரம்.

P Chidambaram referred to AIIMS in Delhi for stomach ache

அக்டோபர் 17 ஆம் தேதிக்கு அவருக்கான காவலை நீடித்தது, சிறப்பு நீதிமன்றம். இந்த நிலையில், சிதம்பரத்திற்கு சிறை உணவு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்க அனுமதி கோரினார். இதற்கு நீதிமன்றம் 2 நாட்கள் முன்புதான் அனுமதி வழங்கியது.

சம்பளம் மட்டும் ரூ.2 லட்சம்.. மொத்தம் ரூ.3.82 மாத வருமானம்.. ரோஜாவுக்கு சூப்பர் பதவி! ஜெகன் தாராளம்சம்பளம் மட்டும் ரூ.2 லட்சம்.. மொத்தம் ரூ.3.82 மாத வருமானம்.. ரோஜாவுக்கு சூப்பர் பதவி! ஜெகன் தாராளம்

இந்நிலையில் சிதம்பரத்திற்கு இன்று, திடீரென வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது. இதனால் சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் சோதித்து வருகின்றனர். சிதம்பரம் உள்நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை. தேவைப்பட்டால் அதுபற்றி மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.

English summary
Congress leader P Chidambaram has been referred to All India Institute of Medical Sciences (AIIMS) for a medical check up after he complained of stomach ache. He has not been admitted yet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X