Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவா விடுதலைக்கு நேரு உதவவில்லையா? வரலாறு தெரியாமல் பேசும் பிரதமர் மோடி- ப.சிதம்பரம் பதிலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோவா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தில் இருந்து கோவா விடுதலை பெறுவதற்கு நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உதவவில்லை என கடுமையாக விமர்சித்து வருகிறார் பிரதமர் மோடி. இதற்கு பதிலடி கொடுத்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் சுதந்திரத்துக்கு முந்தைய, பிந்தைய வரலாறு எதுவும் தெரியாது என சாடியுள்ளார்.

கோவா மாநில சட்டசபைக்கு வரும் 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கோவாவில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜகவும் காங்கிரஸ் தலைவர்களை திரிணாமுல் காங்கிரஸும் இழுத்துக் கொண்டது.

இதனால் இம்மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வென்று மீண்டும் ஆட்சியை அமைக்கக் கூடும் என்கின்றன கருத்து கணிப்புகள். கோவா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கோவாவின் விடுதலை வரலாறு குறித்து பேசிவருவது சர்ச்சையாகி உள்ளது.

கோவாவும் நேருவும்

கோவாவும் நேருவும்

அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகே கோவா நமது நாட்டுடன் சேர்ந்தது. கோவாவில் சத்தியாகிரக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது கூட ராணுவத்தை அனுப்ப மாட்டோம் என்று கூறியவர் ஜவஹர்லால் நேரு. அவரால்தான் சுதந்திரத்துக்குப் பிறகும் கோவா கூடுதலாக 15 ஆண்டுகள் அடிமையாக இருந்தது என விமர்சித்திருந்தார்.

கோவா விடுதலை

கோவா விடுதலை

அதேபோல் கோவா தேர்தல் பிரசாரத்திலும் இந்த பிரச்சனையை பேசினார் பிரதமர் மோடி. அப்போது, நாடு விடுதலை அடைந்த போது நேரு நினைத்திருந்தால் சில மணிநேரங்களிலேயே இந்தியாவுடன் இணைந்திருக்கும். ஆனால் நேரு அப்படி செய்யாததால் மேலும் 15 ஆண்டுகாலம் போர்ச்சுகீசியர்களிடம் கோவா மக்கள் அடிமைகளாக இருந்தனர் என்றார். இதே கருத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூறியிருந்தார். அதேபோல் கோவா தேர்தல் பிரசாரத்திலும் இந்த பிரச்சனையை பேசினார் பிரதமர் மோடி. அப்போது, நாடு விடுதலை அடைந்த போது நேரு நினைத்திருந்தால் சில மணிநேரங்களிலேயே இந்தியாவுடன் இணைந்திருக்கும். ஆனால் நேரு அப்படி செய்யாததால் மேலும் 15 ஆண்டுகாலம் போர்ச்சுகீசியர்களிடம் கோவா மக்கள் அடிமைகளாக இருந்தனர் என்றார். இதேகருத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூறியிருந்தார்.

ப.சிதம்பரம் பதிலடி

ப.சிதம்பரம் பதிலடி

இதற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அளித்துள்ள பதில்: விடுதலைக்கு முந்தைய நாட்டின் வரலாறும் சுதந்திரத்துக்குப் பிந்தைய நாட்டின் வரலாறும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோருக்கு தெரியாது. வரலாற்றை திரித்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக 1947 முதல் 1960-ம் ஆண்டு காலத்தின் வரலாறு என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவுடன் சேர நேருவே காரணம்

இந்தியாவுடன் சேர நேருவே காரணம்

அந்த கால கட்டத்தில் அணிசேரா நாடுகளுக்கு தலைமை தாங்கியவராக நேரு திகழ்ந்தார். கோவா மக்கள் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக உரிய நேரத்தில் நேரு தலையிட்டார். கோவா சுதந்திரம் அடைந்த போது கோவா மக்கள் தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானித்துக் கொள்ள கருத்து கணிப்பு நடத்தவும் சொன்னவர் பண்டித ஜவஹர்லால் நேரு. அன்று நேரு அப்படி சொன்னதால்தான் இன்று இந்தியாவின் ஒரு மாநிலமாக கோவாவும் இருக்கிறது. நாம் நேருவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். கோவா விடுதலையில் நேருவின் பங்களிப்பை அந்த மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+