நாடு முழுக்க குழந்தைகளுக்கு ரத்த சோகை அதிகரிப்பு.. சாப்பாடு இல்லாததுதான் காரணம்- ப.சிதம்பரம் தாக்கு
டெல்லி: பணவீக்கத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே நாட்டில் ரத்தசோகை அதிகரிப்பிற்கு ஒரே காரணம் போதிய உணவின்மைதான் என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், 6 மாத குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை ரத்தசோகையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தசோகை பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை 58.6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 67.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்கிறார். அமைச்சர் சொல்வது போல் ரத்த சோகைக்கு ஒரே ஒரு காரணம் என்ன தெரியுமா போதிய உணவின்மைதான்.

மத்திய நிதியமைச்சர்
ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ பணவீக்கம் எந்த மக்களையும் பாதிக்கவில்லை என்கிறார். மக்கள் குறிப்பாக குழந்தைகள் விலைவாசி உயர்வால் குறைந்த அளவு உணவையே எடுத்துக் கொள்கிறார்கள் என ப சிதம்பரம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர்
டெல்லியில் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரமும் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசுக்கு செவியே கிடையாது. செவி இருந்தால்தானே சாய்க்க முடியும்.

அழுவதா சிரிப்பதா
மக்கள் துன்பப்படுகிறார்கள் என்பதையே அரசு மறுக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு மக்களவை பேசிய நிதித்துறை அமைச்சர் ஜிஎஸ்டி உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்கிறார். இப்படி சொல்வதைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. மக்கள் பாதிக்கப்படவில்லையா?

நிதித் துறை அமைச்சர்
நிதி துறை அமைச்சர் வரலாறு பேசுகிறாரே தவிர பொருளாதாரத்தை பற்றி பேசவில்லை. ஒருவேளை அவர் வரலாற்று ஆசிரியராக இருந்திருக்க வேண்டும். நிதி அமைச்சராக இருக்க முடியாது. வேலைவாய்ப்பின்மை, உணவின்மை உள்ளிட்டவைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள. இதை பார்த்துவிட்டு மக்கள் பாதிக்கப்படவில்லை என்று சொன்னால் என்ன செய்வது? நாங்கள் போராடத்தான் வேண்டும் என்று அவர் கூறினார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications