டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் மகன் பண்ற பிஸினஸுக்கு என்னை ஏன் விசாரிக்கிறீங்க?.. பாய்ந்த ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிலுள்ள அரசியல் தந்தைகள் தங்கள் குடும்பத்திடம் அதிகம் சென்டிமென்ட் வயப்பட்டவர்கள். ஆயிரம் கரடுமுரடுத்தனம் இருந்தாலும் கூட தன் வாரிசுகளின் நல்வாழ்க்கைக்காக எதையும் செய்ய தயங்காத மனிதர்கள் இவர்கள். அதிலும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தந்தைகளின் வாரிசு பாசத்தையும், அதனால் உருவாகும் பஞ்சாயத்துகளையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.

ப.சிதம்பரமும் அப்படியொரு தந்தையாகவே பார்க்கப்படுகிறார். விசாரணையின் துவக்க நிலையில் சிதம்பரம் 'இல்லை, தெரியாது, ஞாபகம் இல்லை' என்று பதில் தெரிவித்தாராம். என்ன இருந்தாலும் பெரும் அரசியல் ஆளுமை, முன்னாள் மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், மூத்த வழக்கறிஞர்! எம்.பி., எனவே அவருக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் எனும் அடிப்படையில் மிக மரியாதையாகவே டீல் செய்துள்ளனர். ஆனால் அவர் ஒரு கேள்விக்கும் தெளிவான பதிலை தரவில்லை.

p chidambaram tests the patience of cbi and ed

அதன் பின் கார்த்தி சிதம்பரம் தொடர்பான கேள்விகளையும், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சிதம்பரம் சில முடிவுகளை எடுத்து அதன் மூலம் பெரும் லாபம் பார்த்தது! போன்றவற்றையும் கேட்பதற்கு சி.பி.ஐ.யின் ஹைலெவல் பாடியே வந்தமர்ந்துவிட்டதாம். கூடவே அமலாக்கத்துறை அதிகாரிகளும் வந்தமர்ந்திருக்கிறார்கள்.

5% தெரியுமா? போகிறபோக்கில் ஜிடிபி சரிவை கிண்டல் செய்த ப. சிதம்பரம்.. என்ன ஒரு தைரியம்!5% தெரியுமா? போகிறபோக்கில் ஜிடிபி சரிவை கிண்டல் செய்த ப. சிதம்பரம்.. என்ன ஒரு தைரியம்!

சரியான தூக்கம் இல்லாதது, வயது மூப்பு ஆகியன ஆனானப்பட்ட சிதம்பரத்தை அசைத்துவிட்டது. இதனால் இந்த ஹைலெவல் டீமின் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது அதீத களைப்பால் தடுமாறியவர் ஒரு கட்டத்தில் 'ப்ளீஸ் தூங்க விடுங்க!' என்று கூறும் மன நிலைக்கு வந்து, அது மறுக்கப்பட்டதும் ஏக எரிச்சலாகி இருக்கிறார்.

இந்த நிமிடத்தில் கார்த்தியின் பிஸ்னஸில் இந்திராணி முகர்ஜி சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி கேட்டபோது 'யார் இந்திராணி?' என்று எரிச்சலாகி இருக்கிறார். அடுத்த கேள்வியில் கார்த்தியின் பிஸ்னஸின் உள் விஷயங்களை அள்ளிப்போட்டதும் "என்னோட பையன் மேரேஜ் முடிஞ்சதும் தனியா தொழில் பண்ணப்போயிட்டார். அவர் பிஸினஸ் பத்தி அவர்ட்டதான் கேட்கணும்! என்னை ஏன் இதுல சம்பந்தப்படுத்துறீங்க?' என்று பாய்ந்து விட்டாராம் விசாரணை டீம் மீது.

உடனே சட்டென்று அவர்கள் 'தேங்க்யூ, நீங்க சொல்றதும் சரிதான். உங்க மகனையே விசாரிக்கிறோம். அதுவும் உங்க கண்ணு முன்னாடி.' என்றபடி எழுந்திருக்க, அதிர்ச்சியில் உறைந்தாராம் ப.சிதம்பரம்.

- ஜி.தாமிரா.

English summary
During the interrogation former union minister P Chidambaram answered all the questions put up by the CBI and ED and all diplomatically, say sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X