"பத்ம விருதுகள்".. பத்ம பூஷண் + பத்மஸ்ரீ விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 13 பேர் தேர்வு! முழு லிஸ்ட்
டெல்லி: நம் நாட்டின் உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி (ஜனவரி 26) பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
நம் நாட்டின் மிகவும் உயரிய விருது என்றால் அது பாரத ரத்னா. இதற்கு அடுத்ததாக பத்ம விருதுகள் உள்ளன.

இந்த பத்ம விருதுகளில் 3 வகைகள் உள்ளன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ என்ற 3 வகைகளில் இந்த விருதுகள் வழங்கப்படும்.
கலை, கல்வி, மருத்துவம், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, பொதுச் சேவை மற்றும் சமூகப் பணி போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தம் 131 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 13 பேருக்கு பத்மபூஷண் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:
தமிழகத்தில் இருந்து யாரும் பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வாகவில்லை. அதேவேளையில் பத்ம பூஷண் விருதுக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மருத்துவ துறைக்கான பத்ம பூஷண் விருது தமிழகத்தை சேர்ந்த கல்லிப்பட்டி ராமசாமி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் சமூக சேவைக்கான பத்ம பூஷண் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த எஸ்கேஎம் மயிலானந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 2 பேரும் பத்ம பூஷண் விருது பெறுகின்றனர்.
பத்மஸ்ரீ விருது பட்டியலை எடுத்து கொண்டால்
* கலைத்துறையில் தமிழகத்தை சேர்ந்த காயத்ரி பாலசுப்பிரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்பிரமணியம் சகோதரிகள் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.
* மருத்துவ துறையில் எச்வி ஹண்டேவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது
* அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த கே ராமசாமிக்கு பத்மஸ்ரீ கிடைக்கிறது.
* சிவில் சர்வீஸ் பிரிவில் தமிழகத்தின் கே. விஜய குமாருக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் வீரப்பனை தேடும் குழுவில் இடம்பெற்று புகழ்பெற்றவர்.
* மொழி மற்றும் கல்வி பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சிவசங்கரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
* கலைப்பிரிவில் நீலகிரியை சேர்ந்த மறைந்த கலைஞர் ஆர் கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.
* கலைப்பிரிவில் திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலத்துக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
* கலைப்பிரிவில் சேலத்தை சேர்ந்த சிற்பக் கலைஞர் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டருக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்கிறது.
* மருத்துவ பிரிவில் தமிழகத்தின் கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.
* கலைப்பிரிவில் ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
* அதேபோல் விளையாட்டு பிரிவில் புதுச்சேரியை சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பஜனிவேல் என்பவருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications