Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. நம் நாட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயர வாய்ப்பு.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருநாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருநாடுகள் இடையேயான வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் நம் நாட்டில் எந்தெந்த பொருட்களின் விலை என்பது கிடுகிடுவென உயரும்? அதேபோல் பாகிஸ்தான் எப்படி பாதிக்கப்படும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் என்ற புல்வெளி பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிசூடு நடத்தி 27 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதில் 12 பேர் காயமடைந்தனர்கள். இந்த தாக்குலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது.

pahalgam-attack-these-items-likely-become-expensive-if-trade-ends-with-pakistan

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாட்டின் படை வீரர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக நம் நாடு சிந்து நதி நீரை நிறுத்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இது பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மாற உள்ளது. அதேபோல் அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்றுவது, பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவது ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்நிலையில் தான் தற்போதைய மோதல் தொடரும் பட்சத்தில் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் பாதிக்கப்படலாம். நம் நாடும் சரி, பாகிஸ்தானும் சரி வர்த்தக உறவை துண்டிக்கலாம். இது நடக்கும் பட்சத்தில் நம் நாட்டில் சில பொருட்களின் விலை என்பது கிடுகிடுவென அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்போது வரை வர்த்தக தடை தொடர்பான அறிவிப்புகள் என்பது வரவில்லை. பொதுவாக நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான வர்த்தகம் என்பது அட்டாரி - வாகா எல்லை வழியாக தான் நடக்கிறது. தற்போது இந்த எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

இதனால் நம் நாட்டில் பல பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இந்த பட்டியலில் உப்பு, உலர் பழங்கள் முதல் கண் கண்ணாடிக்கான லென்ஸ் வரை இடம்பெற்றுள்ளன. அந்த பொருட்கள் என்னென்ன? என்பது பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளது.

உலர் பழங்கள் - கல் உப்பு

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது உலர் பழங்கள். பாகிஸ்தானிடம் இருந்து நம் நாடு அதிகமான உலர் பழங்களை இறக்குமதி செய்கிறது. அதன்படி பார்த்தால் பாதாம், பிஸ்தா உள்பட பிற உலர் பழங்களின் விலை உயரலாம். இதற்கு மாற்றாக பிற இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து உலர் பழங்களை இந்தியா கூடுதலாக வாங்க வேண்டியிருக்கும். அதேபோல் இந்தியா கல் உப்பை பாகிஸ்தானில் இருந்து பெறுகிறது. குறிப்பாக மத பண்டிகைகள் மற்றும் நோன்பு கால உணவுகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்படும்போது இதன் விலையும் அதிகரிக்கும்.

ஆப்டிக்கல் லென்சஸ்

கண்பார்வை குறைப்பாட்டுக்கு ஆப்டிக்கல் லென்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து அதிகமான ஆப்டிக்கல் லென்ஸ் நமக்கு கிடைக்கிறது. இதனால் ஆப்டிக்கல் லென்ஸ்களின் விலையும் உயரலாம். இதுதவிர இன்னும் பல பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளன. அதன்படி பாகிஸ்தானிடம் இருந்து சிமெண்ட், கல், முல்தானி மெட்டி, இரும்பு, ஆர்கானிக் கெமிக்கல்ஸ், மெட்டல் காம்பவுண்ட்ஸ், லெதர் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானில் காய்கறி - பழங்கள் பிரச்சனை

இப்படி இருநாடுகள் இடையேயான வர்த்தக உறவு துண்டிக்கப்படும்போது இந்தியா பாதிக்கப்படும். அதேபோல் பாகிஸ்தானுக்கும் சிக்கல் என்பது ஏற்படும். ஏனென்றால் இந்தியாவும் பாகிஸ்தானுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆர்க்கானிக் கெமிக்கல்ஸ், மருந்துகள், பிளாஸ்டிக் பொருட்கள், பருத்தி, பழங்கள், காய்கறிகள்,டீ, காபி பவுடர், நறுமண பொருட்கள், சர்க்கரை, ஆயில் விதைகள், பால் பொருட்கள், விலங்குகளுக்கான உணவுகளை இந்தியா அதிகமாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்கிறது. வர்த்தக உறவு துண்டிக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்த பொருட்கள் செல்லாது. இதனால் இந்த பொருட்களுக்கு மாற்று ஏற்பாட்டை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பாகிஸ்தானுக்கு பொருளாதார பாதிப்பு

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை விட பாகிஸ்தான் தான் அதிக பாதிப்பை சந்திக்கும். ஏனென்றால் பாகிஸ்தானின் பொருளாதாரம் என்பது தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதனால் ஒவ்வொரு நாடுகளும் அந்த நாட்டிடம் இருந்து பொருட்களை வாங்குவது அவசியம். குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் ஆதரவு நிச்சயம் பாகிஸ்தானுக்கு வேண்டும். இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து பொருட்களை வாங்க மறுக்கும் பட்சத்தில் அது அந்த நாட்டின் தொழிலில் பெரும் அடியை கொடுக்கும். இதனால் இருநாடுகள் இடையேயான வர்த்தக உறவு பாதிக்கப்படும் பட்சத்தில் இந்தியாவை விட பாகிஸ்தான் நிலை தான் மோசமாகும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+