3 ஆண்டுகளுக்கு முன்னரே.. இந்தியாவுக்குள் ஊடுருவல்! பஹல்காம் தீவிரவாதிகளின் திட்டம் இதுதான்
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத செயலில் ஈடுபட்ட மூன்று பேர் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே ஊடுருவிவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த மூன்று பேரும் 'ஆபரேஷன் மகாதேவ்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில், இந்த ஆபரேஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, சுட்டுக்கொல்லப்பட்ட சுலைமான், ஹம்சா ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிப்ரான் ஆகிய மூவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என்று பாதுகாப்புத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "இவர்கள் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தனர். கடந்த ஆண்டு, அவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்தனர். அதில் ஒரு குழுவை சுலைமானும், மற்றொரு குழுவை மூசா என்ற பாகிஸ்தான் பயங்கரவாதியும் வழிநடத்தினர். புதிதாக ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்கள் சுலைமானுடன் இணைந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்தனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு, மூன்று பயங்கரவாதிகளும் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள தச்சிகாம் வனப்பகுதியின் உயரமான இடங்களில் பதுங்கியிருந்தனர். சுலைமான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி மத்திய காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கங்கன்கிர் பகுதியில் கட்டுமான நிறுவனத்தின் மீதான தாக்குதலிலும் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2021ம் ஆண்டு முதல், சுமார் 20 முதல் 25 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு குழு தற்போது ஜம்மு பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பெரிய பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்தது.
வயர்லெஸ் கருவிகள் 20 கி.மீ முதல் 25 கி.மீ வரை தொலைவில் உள்ள சாதனங்களுக்கு இடையே தொடர்பு கொள்ள தெளிவான சிக்னல் மற்றும் தனித்துவமான அதிர்வெண் தேவை. மே 22 அன்று முதல் முறையாக, இவர்களின் சிக்னல் இடைமறிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் திசை காட்டியின் உதவியுடன் வனப்பகுதியில் இடங்களிலிருந்து இவர்கள் பயன்படுத்திய ரேடியோவின் சிக்னல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சமிக்ஞை இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தச்சிகாம் வனப்பகுதியை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்தனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து சமிக்ஞை வந்தவுடன், அந்தப் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் இருக்கக்கூடிய பகுதிகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து, ஜூலை 22 அன்று தொழில்நுட்ப மற்றும் மனித உளவுத்துறையின் உதவியுடன், மூன்று பயங்கரவாதிகளின் இருப்பிடம் சுற்றி வளைக்கப்பட்டது. அவர்களைக் கொல்வதற்கான நடவடிக்கை திட்டமிடப்பட்டது" என்று கூறியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் காவல்துறை மூன்று சந்தேக நபர்களின் படங்களை வெளியிட்டது. அதில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாகைச் சேர்ந்த ஆதில் ஹுசைன் தோகர், அலி பாய் மற்றும் சுலைமான் ஆகியோர் பாகிஸ்தானியர்கள் ஆவர்.
இந்த மூவரும் கொல்லப்பட்டது குறித்து மக்களவையில் பேசிய அமித்ஷா, கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளிடம் பாகிஸ்தான் வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும், உடல்களுக்கு அருகில் பாகிஸ்தான் சாக்லேட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் பயன்படுத்திய சாதனங்களைக் கண்காணிக்க உளவுத்துறையும், ராணுவ வீரர்களும் பல நாட்கள் நடந்தே சென்றனர் என்று அமித்ஷா கூறினார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு ஏகே-47 மற்றும் எம்4 கார்பைன் துப்பாக்கிகளின் தடயவியல் அறிக்கைகள் பைசாரன் புல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட வெற்று தோட்டாவுடன் பொருந்தியது. இதன்மூலம், மூன்று பயங்கரவாதிகளும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதல் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF) ஆகியவற்றின் குழுக்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications