பீட்சா, மருந்துகளை விநியோகிக்கும் சீன டிரோன்கள் மூலம் ஜம்முவில் தாக்குதல் நடத்திய பாக்.பயங்கரவாதிகள்
டெல்லி: பீட்சா மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் சீனாவின் டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலமே ஜம்மு விமானப் படை தளம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து நாசவேலைகளை செய்து வருகிறது பாகிஸ்தான். இப்போது புதிய பாணியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது பாகிஸ்தான்.

டிரோன்களில் வெடிபொருட்கள்- ஆயுதங்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் ஏ.கே.47 ரக ரக துப்பாக்கிகள், வெடிபொருட்களை டிரோன்கள் மூலம் வீசி ஒத்திகை பார்த்தனர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள். சில டிரோன்களை நமது பாதுகாப்பு படையினர் சுட்டும் வீழ்த்தி இருக்கின்றனர்.

விமான படை தளம் மீது தாக்குதல்
இந்த நிலையில்தான் ஜம்முகவில் ஞாயிற்றுக்கிழமையன்று அடுத்தடுத்து 5 நிமிட இடைவெளியில் விமானப் படை தளம் மீது குறைவான சக்தி கொண்ட வெடிகுண்டுகளை டிரோன்கள் மூலம் வீசி இருக்கின்றனர் பயங்கரவாதிகள். இந்த தாக்குதலில் 2 விமானப் படை வீரர்கள் லேசான காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இலக்கு விமானப் படை ஹெலிகாப்டர்க்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை
தற்போது ஜம்மு விமானப் படை தளம் மீதான தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. இதனிடையே தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட டிரோன்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் சீனாவில் இருந்து ஏராளமான ஆளில்லா குட்டி விமானங்களான டிரோன்களை பாகிஸ்தான் ராணுவம் வாங்கி குவித்திருக்கிறது.

சீனா டிரோன்கள்
சீனாவில் பீட்சா, மருந்துகளை விநியோகிக்கவே இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய டிரோன்களை வாங்கிய பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகளுக்கு வெடிபொருட்கள், ஆயுதங்கள் சப்ளை செய்ய கொடுத்திருக்கிறது.

தொடர் தாக்குதல்களுக்கு சதி?
அத்தகைய டிரோன்கள்தான் ஜம்மு விமான படை தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இத்தாக்குதலை ஒரு ஒத்திகை போல பார்த்திருப்பதாகவும் நாட்டின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு நிலைகள் மீது இத்தகைய தாக்குதல்களை அடுத்தடுத்து நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications