ஜம்மு - காஷ்மீர் விமான நிலையத்தை தாக்க பாகிஸ்தான் முயற்சி.. தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக சில நாட்களுக்கு முன்பாக இந்திய ராணுவம் தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி இந்திய ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை செய்தது. இதனால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தற்போது ஜம்மு - காஷ்மீர் விமான நிலையத்தை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாகவே போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நேற்று ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளி வந்துள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்களை நம் நாட்டின் வான்வெளி தடுப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு சுமார் 8 பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு தயாராக இருந்த இந்திய ராணுவம் உடனடியாக அவர்களின் முயற்சியை முறியடித்திருக்கிறது. அதேபோல் மக்களின் பாதுகாப்புக்காக உடனடியாக சைரன் ஒலிக்கப்பட்டதோடு, மொத்தமாக மின்சாரத் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கையாக ஆகாஷ் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஜம்முவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் விமான நிலையத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற்று வருவதாக பார்க்கப்படுகிறது. எல்லைப்பகுதியில் எஸ்400 பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதல் காரணமாக ஜம்மு பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளையும் வீழ்த்தி இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications