"டார்க்கெட் குருத்வாரா".. சீக்கியர்களை குறிவைத்து கொல்லும் பாகிஸ்தான் - வெளியுறவு செயலாளர் தகவல்
டெல்லி: பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரில் குருத்வாராவை குறிவைத்து தாக்கி உள்ளது. இதில் சீக்கியர்கள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிர்ச்சி தகவல்களை கூறினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா நேற்று பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத மையங்களை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன் மூலம் நம் நாடு அட்டாக் செய்தது. இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இதையடுத்து நம் நாட்டை குறிவைத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.

மொத்தம் 15 நகரங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது. அதோடு பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் ட்ரோன் தாக்குதலை நம் நாடு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் மீது ட்ரோன் அட்டாக் நடந்தது.
இதனால் இருநாடுகள் இடையேயான பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛ பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டுமே குறிவைத்து தாக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நம்நாட்டின் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டது.
ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று, ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் சீக்கிய சமூகத்தினரைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்சில் ஒரு குருத்வாரா மீது சீக்கியர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்... பூஞ்சில் மொத்தம் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலுக்கும் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை தொடர்வதும், கைவிடுவதும் பாகிஸ்தான் கைகளிலேயே இருக்கிறது. இந்தியாவில் உள்ள அணைகள் உட்பட முக்கிய உட்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்'' என்று வார்னிங் செய்துள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications