ரேடார்கள் காலி.. விமான ஓடுதளம் சோலி முடிஞ்ச்.. பாகிஸ்தானுக்கு நேர்ந்த கதி.. கர்னல் சோஃபியா குரேஷி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் விமான ஓடுதளம், ரேடார்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாக கூறியுள்ள அவர், பாகிஸ்தானின் பொய்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் தலையீடு காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளன. மாலை 5 மணியுடன் வான், கடல் மற்றும் தரை வழி தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pakistan has suffered very heavy and unsustainable losses says Colonel Sofiya Qureshi and Commodore Raghu R Nair

இதன் மூலமாக கடந்த 4 நாட்களாக நடந்து வந்த சண்டை முடிவடைந்தது. அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக மே 12ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் ரகு நாயர் ஆகியோர் மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கர்னல் சோஃபியா குரேஷி பேசுகையில், இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. பாகிஸ்தானின் விமான ஓடுதளம், ரேடார்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல் பாகிஸ்தானின் பொய்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள மசூதிகளை குறி வைத்து இந்திய படை தாக்குதல் நடத்தியதாக கூறியது அப்பட்டமான பொய்.

அதேபோல் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்400 சுதர்சன் சக்ராவை பாகிஸ்தான் எஸ்17 ஜெட் தாக்கி அழித்ததாக கூறுவதும் பொய். மாறாக பாகிஸ்தான் ராணுவமே பொதுமக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், தேவாலயங்கள் என்று தாக்குதல் நடத்தியது. இப்படி பாகிஸ்தானின் பல்வேறு தவறான பரப்புரைகளை செய்தது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கமாண்டர் ரகு நாயர் பேசுகையில், சண்டை நிறுத்தப்பட்டாலும் முப்படைகளும் தயார் நிலையிலேயே இருக்கும். என்று தெரிவித்தார்.உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. அதேபோல் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவம் முழுமையாகத் தயாராகவும், விழிப்புடனும், உறுதியுடனும் இருக்கிறது. பாகிஸ்தானின் ஒவ்வொரு முயற்சியையும் தீரத்துடன் எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+