இந்தியா மீதான தாக்குதலுக்கு.. 'ஆபரேஷன் பன்யான்-உன்-மர்சூஸ்' என பெயரிட்ட பாகிஸ்தான்! என்ன அர்த்தம்?
டெல்லி: இந்தியா மீதான தாக்குதல்களை நேற்று இரவில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்கி வருகிறது. ஆபரேஷன் பன்யான் உல் மர்சூஸ் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் 'ஆபரேஷன் பன்யான்-உன்-மர்சூஸ்'-ஐத் தொடங்கியுள்ளது," என்று அனைத்து அரசின் அதிகாரபூர்வ ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. புன்யான் உல் மர்சூஸ் என்பது முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனில் உள்ள ஒரு வசனம் ஆகும்.

அல் ஜசீராவின் செய்திப்படி, புன்யான் மர்சூஸ் என்பது குர்ஆனில் உள்ள ஒரு அரபு சொற்றொடர், இது நேரடியாக 'ஈயத்தால் ஆன ஒரு அமைப்பு' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "அல்லாஹ் தனது பாதையில் போர் அணிவகுத்து செல்பவர்களை உண்மையாக நேசிக்கிறான், அவர்கள் ஒரு வலுவான கட்டிட கட்டமைப்பைப் போல திடமான உறுதி கொண்டவர்கள்." என்று கூறப்பட்டு உள்ளது.
அதாவது பாகிஸ்தான் தன்னை ஈயத்தால் ஆன அசைக்க முடியாத அமைப்பு என்றும் அல்லாஹ் பாதையில் போர் செய்வதாக கருதிக்கொண்டு இந்த பெயரை வைத்துள்ளது. இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்த பெயரை வைத்துள்ளது.
நிலைமை மோசம்:
முக்கியமாக இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் மக்கள் குடியிருக்கும் இடங்களை குறி வைக்கிறது. ராணுவ தளவாடங்களை விட மற்ற இடங்களை அதிகம் குறி வைக்கிறது. இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாத இடங்களை தாக்கிய ஆபரேஷன் செந்தூர் திட்டத்திற்கு பாகிஸ்தான் இப்படி தவறான பதிலடி நடவடிக்கைகளை கொடுத்து வருகிறது.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீர் முதல் குஜராத் வரை இந்தியாவில் 26 இடங்களில் பாகிஸ்தான் புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதை இந்தியா உடனுக்குடன் தடுத்தது. ஸ்ரீநகர் அருகே 6-7 ட்ரோன்கள் வரை சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஸ்ரீநகரில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை.
பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினரால் உடனடியாக எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது பாகிஸ்தானின் இருதயம் போன்ற நகரம் ஆகும். அரசியல் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் அரசியலை நிர்ணயிப்பதே லாகூர்தான். லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேபோலம் ராவல்பிண்டியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதி பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருக்கும் பகுதி ஆகும். பாகிஸ்தானின் மிக முக்கிய ராணுவ தளவாடம் ஆகும். இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும்.
பாகிஸ்தானில் உள்ள மூன்று முக்கிய இராணுவ விமானத் தளங்களிலும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. சியால்கோட் மற்றும் நரோவலில் உள்ள பாகிஸ்தான் நிலைகளிலும் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்களில் இந்தியா வானிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் ஃபத்தா-1 ஏவுகணையை தடுத்து நிறுத்தியது இந்தியா பாதுகாப்பு படை. முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. மேற்குப் பகுதியில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications