வழக்கமான ப்ளூ பிரிண்ட்! பாக். காலங்காலமாக இந்தியாவில் இதைத்தான் செய்கிறது! இப்போது எப்படி நம்புவது?
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதல் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் காலங்காலமாக பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஊக்குவித்து வருகிறது. இதுவரை பாகிஸ்தான் உதவியுடன் இந்தியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை இந்த செய்தி விவரிக்கிறது.
1993லிருந்து இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இதன் பின்னர்தான் இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகமாகின.

1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை கிளப்பியது. மொத்தம் 12 ஆர்டிஎக்ஸ் குண்டுகள் வெடித்தன. 250க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை நடத்தியது தாவூத் இப்ராஹிம் கும்பல்தான். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பின்னர் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து 2001 நாடாளுமன்ற தாக்குதல் நடந்தது. லக்ஷர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தை தாக்கி 10 பேரை கொன்றனர். இதன் விளைவாக இந்தியா-பாகிஸ்தான் படைகளுக்கு இடையே உரசல்கள் அதிகரித்தது.
2006ல் மும்பை தாக்குதல் நடந்தது. ரயிலில் 7 குண்டுகள் 11 நிமிடங்களில் வெடித்தது. இதில் 200 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லக்ஷர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.
2008ம் ஆண்டு மும்பயைில் நடந்த 26/11 தாக்குதல் இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக இருந்தது. 10 தீவிரவாதிகள் மும்பையில் உள்ள ஹோட்டலில் புகுந்து 166 பேரை கொலை செய்தனர். இதில் உயிருடன் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப், தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து 8 ஆண்டுகளுக்கு எந்த பெரிய தாக்குதலும் நடக்கவில்ல. ஆனால் 2016ல் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பதான்கோட் விமான தளத்தை தாக்கி 6 வீரர்களை கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பின்னாள் பாகிஸ்தான் இருந்தது ஆதாரமாக நிரூபிக்கப்பட்டது. ஆனால் பாக். இதனை மறுத்தது. அதே ஆண்டு இதே தீவிரவாத அமைப்பினர் உரி தாக்குதலில் ஈடுபட்டனர். மொத்தம் 19 இந்திய ராணுவ வீரர்களை அவர்கள் கொன்றனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எல்லையை கடந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது.
அடுத்த 3வது ஆண்டில் அதாவது 2019ல் இதே தீவிரவாதிகள் சிஆர்பிஎஃப் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலாக இந்தியா விமானப்படை தாக்குதலை நடத்தியது.
இப்போது இந்த தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் பஹல்காம் பகுதியில் தாக்குதலை நடத்தியிருந்தது. இதற்கு பதிலடியாக இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தியிருந்தது.
இப்படி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் இனி வரும் காலங்களிலாவது வாலை சுருட்டிக்கொண்டிருக்குமா என்பது சந்தேகமே.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications