ராஜஸ்தான் எல்லையில் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்- பிஎஸ்ப் வீரர்கள் கைது செய்து தீவிர விசாரணை!
டெல்லி: ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் கைது செய்துள்ள நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த துணை ராணுவப் படை வீரர், தற்போது சிக்கியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும் நாட்டின் எல்லைகள் அனைத்திலும் ராணுவ வீரர்கள் அதிஉச்ச உஷார் நிலையில் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தானில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நாட்டின் துணை ராணுவப் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பஞ்சாப் மாநில எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர், பூர்ணம் குமார், தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பூர்ணம் குமாரை உடனே விடுதலை செய்யவும் மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனாலும் பாகிஸ்தான் அரசு, பூர்ணம் குமாரை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்த நிலையில்தான் ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரர் பிடிபட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு உளவு தகவலை பகிர்ந்த இளைஞர் ஒருவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர் அடுத்து சிக்கி இருக்கிறார். இந்த சம்பவம் எல்லைகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications