டெல்லியை குறிவைத்த பாகிஸ்தான்.. பறந்து வந்த ஃபத்தா II ஏவுகணை.. ஹரியானாவிலேயே கதையை முடித்த இந்தியா
இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடியை நம் நாடு கொடுத்து வரும் நிலையில் டெல்லியை தாக்கி பாகிஸ்தான் ஃபத்தா II என்ற அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையை ஏவிய நிலையில் அதன் கதையை ஹரியானாவிலேயே நம் நாடு முடித்தது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் என்பது உச்சம் தொட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் இந்த மோதல் என்பது வலுத்து வருகிறது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் நாம் பந்தாடி வருகிறோம். இந்நிலையில் தான் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது இன்று உச்சம் தொட்டுள்ளது.

பாகிஸ்தான் நம்மை குறிவைத்து நடத்தும் தாக்குதலுக்கு ‛ஆபரேஷன் பன்யான் உல் மர்சூஸ்' என்று பெயர் வைத்துள்ளது. இந்த பெயருக்கு அசைக்க முடியாத சுவர் அல்லது ஈயத்தால் ஆன தடுப்பு அரண் என்ற பொருள் வரும். நேற்று இரவு முதல் பாகிஸ்தான் நம் நாட்டின் 26 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அது முறியடிக்கப்பட்டது.
இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நுர்கான், ஷார்காட்டில் உள்ள ரஃபிக்கி விமான தளம் மற்றும் சாக்வால் பகுதியில் உள்ள முரித் விமானதளங்கள் அழிக்கப்பட்டன. அதேபோல் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ட்ரோன் ஏவுதளமும் அழிக்கப்பட்டது.
இதற்கிடையே தான் இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலையும் தொடங்கியது. பாகிஸ்தானின் அதிக சக்தி கொண்ட ஏவுகணைகளில் ஒன்றாக ஃபத்தா II(Fatah II) உள்ளது. இந்த ஏவுகணை இன்று ஹரியானா மாநிலம் சிர்சாவில் வானில் பறந்து சென்றபோது அதனை நம் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து வானிலேயே தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை என்பது டெல்லியை குறிவைத்து அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிர்சாவில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஃபத்தா II ஏவுகணை என்பது லாங்க் ரேஞ்ச் ஏவுகணையாகும். இது Surface to Surface வகையை சேர்ந்தது. இதனால் இந்த ஏவுகணையை வைத்து தரையில் இருப்பதை மட்டுமே அழிக்க முடியும். உதாரணமாக இந்த ஏவுகணை தரையில் இருந்து ஏவப்படும்போது அது மறுபுறம் தரையில் உள்ள கட்டடம் உள்ளிட்டவற்றை மட்டுமே தாக்கும். அதாவது ஏவுகணையை ராணுவ முகாம், பயங்கரவாத முகாம், ரேடார் அமைப்புகளை தாக்கி அழிக்க இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஏவுகணையால் வானில் பறக்கும் ட்ரோன், போர் விமானங்கள், எதிரி நாடுகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்க முடியாது. அதேபோல் போர் விமானங்களில் இருந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி இந்த ஏவுகணையை ஏவ முடியாது. இந்த ஃபத்தா II ஏவுகணை என்பது ஜிபிஸ் மூலம் வழிக்காட்டப்பட்ட ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏவுகணையை பாகிஸ்தான் 2021 டிசம்பர் மாதம் சோனை செய்து பயன்படுத்தி வருகிறது.
இது ஒரு அப்கிரேடட் வெர்ஷன் ஏவுகணையாகும். ஃபத்தா I ஏவுகணையை அப்கிரேட் செய்து ஃபத்தா II ஏவுகணை என்பது உருவாக்கப்பட்டுள்ளது. இது ஃபத்தா I ஏவுகணையை வி துல்லியமாக தாக்கும் தன்மை கொண்டது. இந்த ஏவுகணையின் ரேஞ்ச் என்பது குறைந்தபட்சம் 250 கிலோமீட்டர் முதல் 400 கிலோமீட்டர் வரை உள்ளது. இந்த ஏவுகணை வெடிப்பொருட்களை சுமந்து சென்று தாக்கும் தன்மை கொண்டது. பாகிஸ்தானில் Surface To Surface Missile வகையை பொறுத்தமட்டில் இந்த ஏவுகணை தான் பலமானதாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications