நாகா விடுதலை போர், எரியும் மணிப்பூர், பாகிஸ்தான் ஆதரவு வங்கதேசம்- பேராபத்தில் வடகிழக்கு மாநிலங்கள்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் தற்போது அடுத்தடுத்து மத்திய அரசுக்கு தீராத தலைவலியாக உருவெடுத்து நிற்கின்றன. மணிப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் வன்முறைகள், மத்திய அரசுடனான அமைதி ஒப்பந்தத்தை கைவிட்டு விட்டு தனிநாடு கோரி மீண்டும் விடுதலைப் போராட்டம் நடத்துவோம் என நாகா இன குழுக்கள் அறிவிப்பு, மணிப்பூர் பிரச்சனையால் மிசோரம் மாநில அரசின் தன்னிச்சையான முடிவுகள்.. இப்படித்தான் வடகிழக்கு மாநிலங்கள் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன.

மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் அண்டை நாடுகளான சீனா, மியான்மர், பூட்டான் மற்றும் வங்கதேசத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. நமக்கு எப்போதும் எதிராகவும் நிற்கக் கூடிய சீனா, வடகிழக்கு மாநிலங்களில் சிறு சிறு மக்கள் கோரிக்கைக்கும் ஆயுதங்களை வழங்கி ஆயுதப் போராட்டமாக உருமாற்றிக் கொண்டிருக்கிறது.

manipur nagaland pakistan

பற்றி எரியும் மணிப்பூர்: மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மக்களிடையே பிரச்சனை; குக்கி இன மக்கள் தனி சுயாட்சி நிர்வாகம் கோருகின்றனர். இதற்கும் ஆயுதங்களை கையில் எடுத்து மைத்தேயி இன மக்களை படுகொலை செய்கின்றனர்; இதன் பின்னணியில் மியான்மரில் இருந்து செயல்படும் சீனா ஆதரவு ஆயுத குழுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக மீண்டும் வன்முறை வெறியாட்டம் அதிகரித்துள்ளது.

நாகாலாந்து பிரச்சனை: இன்னொரு பக்கம், நாகா இனக்குழுவினர் நீண்டகால அகன்ற நாகாலாந்து தனிநாடு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மத்திய அரசுடன் 1995-ல் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் நாகாலாந்து மக்களுக்கு தனி கொடி, தனி அரசியல் சாசனம் என்பதில் நாகா ஆயுதக் குழுவினர் உறுதியாக நிற்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு தற்போதைய ஆளுநரான ஆர்.என்.ரவி, நாகாலாந்தில் மத்திய அரசு பிரதிநிதியாக நடத்திய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் மத்திய அரசுடனான ஒப்பந்தத்தை கை விட்டு மீண்டும் தனிநாடு கோரும் ஆயுதப் போராட்டத்டை நடத்தப் போவதாக நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.

மிசோரம் சிக்கல்: மணிப்பூர் மற்றும் மியான்மர் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படு குக்கி சோ மற்றும் மிசோ பழங்குடி மக்கள் தங்களது தொப்புள் கொடி உறவுகள் என்பதால் இந்த மக்களுக்கு மிசோரம் மாநில அரசு ஆதரவு தருகிறது. மியான்மர் அகதிகளுக்கு அடைக்கலம் தர மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தும் மிசோரம் அரசு தன்னிச்சையாகவே அடைக்கலம் தந்து வருகிறது.

வங்கதேசத்தில் காலூன்றும் பாகிஸ்தான்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இப்படி கொந்தளித்துக் கொண்டிருக்க அண்டை நாடான வங்கதேசத்திலோ அதிகாரத்தில் இருந்து ஷேக் ஹசீனா தூக்கி எறியப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஷேக் ஹசீனாவை வெளியேற்றியதில் முக்கிய பங்கு வகித்த ஜமாத் இ இஸ்லாமி இயக்கம், ஷேக் ஹசீனாவுக்கு பிந்தைய இடைக்கால அரசு ஆகியவை அனைத்தும் இப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்றன. 55 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல், வங்கதேசத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை ஆதரிக்கும் இன்றைய வங்கதேசத்தின் இந்த நிலைப்பாடு இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.

சீனாவின் மிரட்டல் + பாகிஸ்தான்: அதுவும் வடகிழக்கு மாநிலங்களின் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில் வங்கதேசத்தில் பாகிஸ்தான் நேரடியாக காலூன்றுவது மிகப் பெரும் அபாயத்தை உருவாக்கும். பூட்டானின் டோக்லாம் பள்ளத்தாக்கை குறிவைத்தும் அருணாச்சல பிரதேசத்தை இலக்கு வைத்தும் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் பெருநிலப்பரப்பில் இருந்து துண்டிக்க சீனா தொடர்ந்து முயற்சிக்கும் நிலையில் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தில் பாகிஸ்தான் கால் பதிப்பது வடகிழக்கில் நிலைமைகளை மோசமாக்கிவிடும் என எச்சரிக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+