முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடா? நாடாளுமன்றத்தில் அமளி!.இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
டெல்லி: கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. பாஜக எம்.பிக்கள் இந்த பிரச்சினையை எழுப்பினர். இதனால், ஏற்பட்ட அமளியை தொடர்ந்து இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கூடி இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆம் தேதி அவை கூடியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று காலை கூடியதும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் பதாகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்டனர்.

உத்தர பிரதேசத்தில் நடைபெறும் பிரச்சினைகளை எழுப்பி சமாஜ்வாடி எம்பிக்கள் பதாகைகளை காட்டினர். சபாநாயகர் அமளியில் ஈடுபட்ட எம்.பிக்களை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் தொடர்ந்து அமளி நீடித்தது. இதையடுத்து நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் அவை கூடிய போதும், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கருத்து தொடர்பாக அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதே போல ராஜ்யசபாவில், கர்நாடகா விவகாரம் எதிரொலித்தது. அதாவது கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அம்மாநில அரசின் முடிவு குறித்து மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். இவருக்கு ஆதரவாக என்.டி.ஏ எம்பிக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய கிரண் ரிஜிஜூ, அரசியல் அமைப்பு பதவியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ஒருவர் இட ஒதுக்கீடு அளிப்பதற்காக அரசியல் அமைப்பு மாற்றப்படும் என்று கூறியிருக்கிறார். இது குறித்து நான் எதிர்க்கட்சி தலைவரிடம் விளக்கம் கேட்கிறேன்" என்றார். இதையடுத்து, மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவும் இதே விவகாரத்தை எழுப்பினார்.
அப்போது அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, ஜேபி நட்டா " இதுபோன்ற சட்டங்கள் திரும்ப பெற வேண்டும். கார்கே பதிலளிக்க வேண்டும்" என்றார். இந்த விவகாரம் தொடர்பாக எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications