Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛தோல்வி பயம்’.. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மறுக்கும் சோனியா காந்தி? ராஜ்யசபா எம்பியாக முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இந்த தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட தயக்கம் காட்டி வருவதாகவும், அவர் ராஜ்யசபா எம்பி பதவி மீது கண்வைத்துள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் வரும் மார்ச் மாதம் தேர்தல் தேதி என்பது அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Parliament Election 2024: Sonia Gandhi may not contest on Raebareli and opt for a Rajya Sabah berth

இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 2014, 2019 ஆகிய ஆண்டுகளை போல் இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறம் பாஜகவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதற்காக காங்கிரஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, உத்தர பிரதேச எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, முதல்வர் ஸ்டாலினின் திமுக, பீகாரில் எதிர்க்கட்சியாக உள்ள லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் சரத் யாதவின் தேசியவாத காங்கரஸ் உள்பட 27 கட்சிகள் ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் இடம்பிடித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பாஜகவின் கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது.

பாஜகவை வீழ்த்த தனித்தனியாக போட்டியிட்டால் முடியாது என்பதை உணர்ந்துள்ள எதிர்க்கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியாக இணைந்துள்ளன. இதன்மூலம் பாஜகவுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மறுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது சோனியா காந்தி தற்போது உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்பியாக உள்ளார். உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் கடந்த தேர்தலில் சோனியா காந்தி மட்டுமே ரேபரேலியில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி கூட அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியால் வீழ்த்தப்பட்டார். ஒரு காலத்தில் உத்தர பிரதேசத்தில் ஜொலித்த காங்கிரஸ் கட்சி என்பது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. ரேபரேலி, அமேதி என்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக இருந்தாலும் கூட ராகுல் காந்தி அமேதியில் தோற்றார். ரேபரேலியில் சோனியா காந்தி வாகை சூடியிருந்தார்.

இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலியில் சோனியா காந்தி மீண்டும் போட்டியிட்டால் அவரை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தாலும் கூட அயோத்தி ராமர் கோவில் திறப்பால் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கான செல்வாக்கு என்பது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது உண்மையிலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக அமைய உள்ளது. அதேவேளையில் பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்பட பிற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரச்சனையாக அமையலாம். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கும் நிச்சயம் பிரச்சனை ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதனால் ரேபரேலியில் சோனியா காந்தி போட்டியிட மறுப்பதாக சொல்லப்படுகிறது.

இதுமட்டுமின்றி சோனியா காந்தி போட்டியிட மறுப்பதன் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் உள்ளது. இதில் முதல் காரணம் என்பது சோனியா காந்தியின் உடல்நலமாகும். அதாவது சோனியா காந்திக்கு தற்போது 77 வயது ஆகிறது. அவரது உடல்நிலையும் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது. அடிக்கடி மாறும் காலநிலை உள்ளிட்டவற்றால் கூட அவர் திடீரென உடல்நலம் பாதிக்கப்படுகிறார். இதனால் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு 2வது காரணம் என்பது ரேபரேலி என்பது காங்கிரஸ் தலைவர்களின் பாரம்பரிய தொகுதியாகும். இதனால் தனக்கு பதில் பிரியங்கா காந்தியை இந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் அரசியலில் நுழைய வைக்க சோனியா காந்தி திட்டமிட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது ரேபரேலியில் பிரியங்கா காந்தியை களமிறக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு ராஜ்யசபா எம்பியும், கர்நாடகாவில் 3 ராஜ்யசபா எம்பியும், தெலுங்கானாவில் 4 ராஜ்யசபா எம்பியும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து சோனியா காந்தி ராஜ்யசபா எம்பியாக தேர்வு ஆகலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+