14 மசோதாக்கள் ரெடி.. நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனல் பறக்க போகுது.. முழு லிஸ்ட்
டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. நாளை காலையில் லோக்சபா, ராஜ்யசபா என இருசபைகளும் தொடங்கி டிசம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சி கூட்டம் இன்று நடந்த நிலையில் மொத்தம் 14 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய தயாராக உள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் (குளிர்கால கூட்டத்தொடர்) நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான தேதியை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ அறிவித்தார்.

அதன்படி டிசம்பர் 1ம் தேதி (நாளை) தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வர உள்ள மசோதாக்கள் பற்றிய முக்கிய தகவ்லகள் வெளியாகி உள்ளன. அதன்பட மத்திய அரசு மொத்தம் 14 மசோதாக்களை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த மசோதாக்களின் விவரங்கள் வருமாறு:
* அணுசக்தி மசோதா 2025 கொண்டு வரப்பட உள்ளது. இந்த மசோதா அணுசக்தி பயன்பாட்டை ஒழுங்குப்படுத்துவதோடு, அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
* அதேபோல் இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா 2025 ரெடியாக உள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுயாட்சியை ஊக்குவிப்பதற்கும், வெளிப்படையான அங்கீகார வழிமுறைகளை உருவாக்குவது இதன் நோக்கமாகும். மேலும் கல்வித் தரங்களை மேம்படுத்த வலுவான ஒழுங்குமுறை கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய ஆணையம் நிறுவ இந்த மசோதா அனுமதி வழங்க உள்ளது.
* இதுதவிர ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்தம்) மசோதா, 2025
* திவால்நிலை மற்றும் திவால்நிலை குறியீடு (திருத்தம்) மசோதா, 2025
* மணிப்பூர் சரக்கு மற்றும் சேவை வரி (இரண்டாவது திருத்தம்) மசோதா 2025
* அவசர சட்டத்தை மாற்றும் மசோதா 2025
* அவசர சட்டத்தை ரத்து செய்தல் மற்றும் திருத்தும் மசோதா 2025
* நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான விரைவான மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதலுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் (திருத்தம்) மசோதா 2025
* நிறுவன சட்டம் 2013 மற்றும் எல்எல்பி சட்டம் 2008 ஆகியவற்றின் விதிகளை திருத்துவதற்கான கார்ப்பரேட் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2025,
* செபி சட்டம், 1992, வைப்புத்தொகை சட்டம், 1996 மற்றும் பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1956 உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்பதற்கான பத்திரச் சந்தைகள் குறியீடு மசோதா, 2025
* காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025
* நடுவர் மற்றும் சமரச (திருத்தம்) மசோதா 2025
* மத்திய கலால் (திருத்தம்) மசோதா, 2025
* சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு வரி மசோதா, 2025 உள்ளிட்ட மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மசோதாக்களில் பலவற்றுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் நாளை தொடங்கும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications