அதெல்லாம் இந்தியாவுக்கு எதிராக லண்டனில் எதுவும் பேசலையே.. ராகுல் காந்தி பொளேர் பதிலடி
லண்டன் பேச்சு குறித்து ராகுல் காந்தி விளக்கம் தந்துள்ளார்.
டெல்லி: லண்டன் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக தாம் எதுவும் பேசவில்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தி அண்மையில் இங்கிலாந்து சென்றிந்தார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியவை ஒடுக்கப்படுவதாக விம்ர்சித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த வெளிநாட்டு பேச்சு மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற லோக்சபாவில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்தார். லோக்சபாவில் பேசிய ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி லண்டனில் இந்தியாவை அவமதித்துவிட்டார். நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்கிறார் ராகுல் காந்தி. அவரது கருத்துக்கு சபை எம்பிக்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். ராஜ்யசபாவில் பேசிய பிரகலாத் ஜோஷி, , 1975-ல் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் எங்கே இருந்ததாம்? மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசர சட்ட நகலை ராகுல் காந்தி கிழித்தாரே அப்போது எங்கே இருந்தது ஜனநாயகம் என கேள்வி எழுப்பினார்.

மேலும் ராகுல் காந்தியின் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களும் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
இதனிடையே இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றம் வருகை தந்தார். அப்போது, லண்டனில் தாம் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் தாம் விளக்க அளிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications