டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடாளுமன்றம் ரவுண்ட்-அப்: ஆக்சிஜன் பற்றாக்குறையை வைத்து அரசியல் நடத்தினார்கள்- மன்சுக் மாண்டவியா

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனா, இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக நிறைய அரசியல் நடந்தது என்று லோக்சபாவில் இன்று குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தின் காந்தி சிலை அருகே 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தர்ணா போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பாஜகவும் அதே இடத்தில் எதிர்க்கட்சியினரின் "ஜனநாயக விரோத" நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இன்று போராட்டம் நடத்தியது.

 Parliament roundup in Tamil: On day 5, Mansukh Mandaviya slams politics being played over Covid management

"எதிர்க்கட்சிகளின் இருவேறு தன்மையையும் இரட்டை வேடத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்று பாஜக எம்பி நரசிம்மராவ் அப்போது கூறினார்.

லோக்சபாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான, தரவுகளைக் கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியிருந்தோம். 19 மாநிலங்கள் பதிலளித்தன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பஞ்சாபில் மட்டும் நான்கு 'சந்தேகத்திற்கிடமான' இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஆக்சிஜனைச் சுற்றி கோவிட்-19 இன் இரண்டாவது அலையின்போது அரசியல் தொடங்கியது, சில மாநிலங்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று அந்தந்த மாநிலத்தில் ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்தன என்று வாதிட்டன. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை சந்தேகத்தால் 4 பேர் இறந்ததாக பஞ்சாப் மட்டும்தான் தெரிவித்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். கொரோனா இரண்டாவது அலையின் போது தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. உற்பத்தியை அதிகரித்ததோம். துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற சூழ்நிலையில் கூட, பலர் அரசியல் விளையாட்டுகளை செய்வதை தவிர்க்கவில்லை. இது அரசியலுக்கு உட்பட்டது அல்ல.

இந்தியாவில் 3.46 கோடி கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன, 4.6 லட்சம் பேர் இறந்துள்ளனர். இது மொத்த வழக்குகளில் 1.36% ஆகும். இந்தியாவில் 25,000 வழக்குகள் மற்றும் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 340 இறப்புகள் பதிவாகியுள்ளன - இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய கண்காணிப்பு ஆணையம் (திருத்தம்) மசோதா மற்றும் டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபனம் (திருத்தம்) மசோதா ஆகியவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் வகையில், பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கால் மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு மசோதாக்களும் இடைநிலைக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மாற்றியமைக்க உள்ளன.

English summary
On fifth day of Winter session of Parliament, Union Health Minister Mansukh Mandaviya on Friday said in the Lok Sabha that a lot of politics happened around oxygen shortage during the second wave of Covid-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X