"விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தோர் குறித்த தகவல்கள் இல்லை.." நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன
புதுடில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று, 12 ராஜ்யசபா எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் வலியுறுத்தின. ஆனால், அதை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு மீண்டும் நிராகரித்தார்.
அதேபோல மக்களவையில் எதிர்க்கட்சிகள் "நீதி வேண்டும்" என்ற முழக்கத்தை எழுப்பினர். மேலும்,சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான ஆகஸ்ட் 11இல் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாகக் கூறி, விதி 256இன் கீழ் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத வகையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்பிகள் கடந்த திங்களன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் இன்று(டிச.1) என்ன நடந்தது?
மக்களவையில் எம்பிக்கள் பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கொரோனா பரவல் குறித்துப் பேசினர். மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரினர்.
மேலும், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தினார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "ராஜ்யசபாவின் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்" என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு மத்தியில், காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவசாயிகளின் உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்து மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீதி வேண்டும் என கோஷத்தை எழுப்பினர்.
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜ்ய சபா எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எதிர்க்கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன், போராட்டம் நடத்தி வருகின்றனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் வரை தினமும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்த உத்தரவை எதேச்சதிகாரம் என்று விமர்சித்துள்ள அவர்கள், நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பியதற்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். "இந்த சட்டவிரோத சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது தொடரும்" என்று தெரிவித்தனர்.
'போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்த தகவல்கள் இல்லை': நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, "இது தொடர்பாக விவசாய துறை அமைச்சகத்திடம் எந்த தரவுகளும் இல்லை, எனவே இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை கேள்வி எழவில்லை" என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், "சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 ராஜ்யசபா எம்பிகள் அவைக்கு வர விரும்பினால், அவர்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர்களின் தர்ணா போராட்டம் தொடரட்டும். மகாத்மா காந்தி அவர்களுக்கு அறிவை தரட்டும்" என்று கூறினார்.
காஷ்மீரில் ஊடுருவல், பயங்கரவாதத் தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக உள் துறை அமைச்சகம் கூறுகிறது
இது தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் ராஜ்யசபாவிற்கு அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், ஜம்மு காஷ்மீரில் 2018 ஆம் ஆண்டு முதல் ஊடுருவல் மற்றும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளது" என்று தெரிவித்ததாக ஏஎன்ஐ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் குடும்பங்களுக்கு ரூ 1 லட்சம் கருணைத் தொகை: உள் துறை அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள திட்டத்தின் கீழ், பயங்கரவாத வன்முறையில் கொல்லப்பட்டும் நபர்களின் உறவினர்களுக்கு ரூ 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் மற்றொரு திட்டத்தின் கீழ் ரூ 5 லட்சம் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
'விவசாயிகள் இறப்பு குறித்து தகவல் இல்லை என மத்திய அரசு கூறுவது அவமானம்' மல்லிகார்ஜுன கார்கே
நாடாளுமன்றத்தில் பேசிய ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இது விவசாயிகளை அவமதிக்கும் செயல், 3 விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின் போது 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக எந்தத் தரவும் இல்லை என்று மத்திய அரசு எப்படிச் சொல்ல முடியும்?
அரசிடம் இந்த 700 பேர் குறித்த தகவல்களே இல்லை என்றால், அவர்கள் பெருந்தொற்றின்போது உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களின் குறித்த தகவல்களை எப்படிச் சேகரித்தார்கள்? கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் காரணமாக 50 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், ஆனால் மத்திய அரசோ வெறும் 4 லட்சம் பேர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறுகிறது" என்றார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மக்களவை பாஜக எம்.பி வலியுறுத்தினார்
பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.
மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இந்த பிரச்சினையை எழுப்பிய நிஷிகாந்த் துபே, "கடந்த மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம், பொது சிவில் சட்டம் பற்றி பேசும் அரசியலமைப்பின் 44ஆவது பிரிவைச் செயல்படுத்துவது தொடர்பாக ஒரு குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட பொது சிவில் சட்டத்தை நம்மால் கொண்டு வர முடியவில்லை. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு விரைவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications