லக்கிம்பூர் சம்பவம்: அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்யணும்- ராகுல்.. நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 14வது நாளான இன்று லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டும் ஒத்திவைக்கப்பட்டன. லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியைத் தொடர்ந்து லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், பல்லுயிர் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து அவை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக ராஜ்யசபாவும் சபை நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட வெறும் 9 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.
நாங்கள் விவாதத்திற்கு அழைக்கிறோம், ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் அமளி குறித்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், "லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடந்து வருகிறது. நாடாளுமன்றம் என்பது விவாதங்களுக்கான இடம். எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைப் பெற விரும்புகிறோம்.

நாங்கள் அவர்களை விவாதத்திற்கு அழைத்தோம் ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.
91% MSME செயல்பட்டுகின்றன, வெறும் 9% MSME நிறுவனங்கள் மட்டுமே மூடப்பட்டன: ராகுல் காந்தி கேள்விக்கு மத்திய அரசு பதில்
கடந்த ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டு நேஷனல் ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 5,774 MSME (சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) நிறுவனங்களிடம் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆன்லைன் சர்வே நடத்தியது. அதில் 91% MSMEகள் செயல்பட்டதாகவும், வெறும் 9% நிறுவனங்கள் மட்டுமே கொரோனாவால் மூடப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது என்று மத்திய அரசு ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தது.
லக்கிம்பூர் சம்பவம்: உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆலோசனை
லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவர் உள்துறை அமைச்சகத்தில் துறை ரீதியிலான சில அதிகாரப்பூர்வ கூட்டங்களை நடத்தினார்.
விவசாயிகளைக் கொன்ற அமைச்சர் தண்டிக்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி
மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, "லக்கிம்பூர் கேரியில் நடந்த கொலையைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்க வேண்டும், அங்கு அமைச்சரின் தலையீடு இருந்தது. இது ஒரு திட்டமிட்ட சதி. விவசாயிகளைக் கொன்ற அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் தண்டிக்கப்பட வேண்டும்.
குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு மக்களவை இரங்கல்
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தமிழகத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக ராஜ்யசபாவில் விதி 267ன் கீழ் பேச நாங்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தோம். அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம், குறிப்பாக விவசாயிகள் கொலை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் அது ஒரு கூட்டுச்சதி என்றும் சிறப்பு விசாரணைக் குழு தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, இது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும். இது தொடர்பாக போலீசாரும் புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடைபெறுகிறது. இதில் உள் துறை இணை அமைச்சரின் மகனுக்குத் தொடர்புள்ளது. அவர் தனது 13 நண்பர்களுடன் சேர்ந்து விவசாயிகளைக் கொன்றுள்ளார்" என்றார்.
லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக விசாரிக்க அரசு தயாராக இல்லை - காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால்
காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் கூறுகையில், "லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இல்லை. இது திட்டமிடப்பட்ட கூட்டுச் சதி என்று சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசு விவாதிக்கத் தயாராக இல்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்பிரச்சினையில் அரசு விளக்கம் அளிக்க முன்வர வேண்டும்" என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications