வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப் போறோம்... எடுத்த எடுப்பில் திரியை கொளுத்திய பிரதமர் மோடி!
டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இன்று முதல் 5 நாட்கள் இந்த கூட்டத் தொடர் நடைபெறும். இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நாளை முதல் புதிய கட்டிடத்திலும் கூட்டத் தொடர் நடைபெறும்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு வருகை தந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் அமையும் என்றார். மேலும் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடப்பு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரானது குறுகிய காலம் நடைபெறும். ஆனால் மிகப் பெரியது. வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்க இருக்கிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும். 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவோம் என்பதுதான் இலக்கு. இதற்கான நடவடிக்கைகளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மேற்கொள்வோம். புதிய நாடாளுமன்றத்தில் புதிய உறுதிமொழிகள் எடுக்கப்படும். நாட்டின் முன்னேற்றத்துக்கு எந்த தடைக்கல்லும் இருக்கக் கூடாது. சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவிய விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறோம். ஜி20 உச்சி மாநாடு ஏழைகளின் குரலை ஒலிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
#WATCH | PM Narendra Modi says, "...This session of the Parliament is short but going by the time, it is huge. This is a session of historic decisions. A speciality of this session is that the journey of 75 years is starting from a new destination...Now, while taking forward the… pic.twitter.com/suOuM2pnyH
— ANI (@ANI) September 18, 2023
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி எடுத்த எடுப்பிலேயே, வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடிய தொடர் என குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுகையிலும் நாடாளுமன்ற லோக்சபாவிலும் அழுத்தம் திருத்தமாக வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுப்போம் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications