பரிசு மழை.. புதிய நாடாளுமன்றத்தில் என்ட்ரியான எம்பிக்களுக்கு கிப்ட்! என்னவெல்லாம் தெரியுமா? லிஸ்ட்
டெல்லி: இன்றுடன் பழைய நாடாளுமன்ற கட்டடம் தனது பணியை முடித்து கொண்டது. இதையடுத்து இன்று மதியம் 1 மணி முதல் புதிய நாடாளுமன்றத்தில் இரு சபைகளும் தொடங்கின. முதல் முறையாக எம்பிக்கள் புதிய நாடாளுமன்றத்தில் கால் எடுத்து வைத்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கிப்ட் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. நேற்று முதல் நாள் கூட்டம் என்பது நடந்து முடிந்தது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் கடைசிநாள் கூட்டம் இதுவாக அமைந்தது.

இதனால் கடந்த 75 ஆண்டு கால நீண்ட வரலாறு கொண்ட பழைய நாடாளுமன்ற கட்டடம் குறித்த விவாதம் நேற்று நடந்தது. இதையடுத்து இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன்பிறகு இன்று மதியம் 1 மணி முதல் நாடாளுமன்ற கூட்டம் என்பது புதிய நாடாளுமன்ற கட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
புதிய நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் நட்நது சென்றனர். பிரதமர் மோடியின் அருகே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவரும், எம்பியுமான ஜேபி நட்டா உள்ளிட்டவர்கள் முன்வரிசையில் செல்ல அவர்களை பின்தொடர்ந்து பிற மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் புதிய நாடாளுமன்ற கட்டத்துக்குள் நுழைந்தனர்.
இந்த வேளையில் பாஜக எம்பிக்கள் ‛பாரத் மாதா கீ ஜே'' என கோஷமிட்டனர். அதோடு, புதிய நாடாளுமன்ற கட்டத்தின் படிகளை தொட்டு வணங்கி உள்ளே சென்றனர். இனி நாடாளுமன்ற நிகழ்வுகள் அனைத்தும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டத்தில் தான் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் புதிய நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்தையொட்டி ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்பிக்களுக்கு சிறப்பு பரிசு (கிப்ட்) வழங்கப்பட்டுள்ளது.
இந்த கிப்ட் பாக்ஸ் மூலம் எம்பிக்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கப்பட்டது. இந்த கிப்ட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின் நகல், ரூ.75க்கான வெள்ளி நாணயம், புதிய நாடாளுமன்றத்தின் ஸ்டேம்புடன் கூடிய கையேடு, நாடாளுமன்ற முத்திரை உள்பட பல பொருட்கள் அதில் இடம்பெற்றிருந்தது. முன்னதாக ‛சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்'' என்ற பெயரில் மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான திட்டத்தை வகுத்தது. பிரதமர் நரேந்திர மோடி 2020ம் ஆண்டு இறுதியில் அடிக்கல் நாட்டி புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மொத்தம் ரூ.971 கோடி செலவில் இந்த கட்டடம் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது. மக்களவை, மாநிலங்களவைகளுடன் எம்பிக்களுக்கான ஓய்வு அறை, பெரிய நூலகம், நாடாளுமன்ற குழுவினருக்கான அறைகள், உணவருந்தும் பகுதிகள், வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் சொகுசு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் மொத்தம் 4 தளங்களை கொண்டதாகும். புதிய நாடாளுமன்றத்தின் மொத்த பரப்பளவு 64,500 சதுர மீட்டராகும். புதிய நாடாளுமன்ற கட்டடம் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தைவிட 17,000 சதுர மீட்டர் அளவுக்கு பெரியதாகும். நாடாளுமன்ற மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் (ராஜ்யசபாவில்) 324 இருக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்த புதிய நாடாளுமன்ற கடட்டத்தை கடந்த மே மாதம் 28 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில் இன்று முதல் முறையாக கூட்டம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications