செம! இனி நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் படகு சேவை.. பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே முடிவு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இடையேயான சந்திப்பில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி இலங்கையில் யூபிஐ பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளவும், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் படகு சேவைகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு முடிந்தாலும் கூட இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. குறிப்பாக கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியையும், கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்கிரம சிங்கே பொறுப்பேற்றார். இவர் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதற்கிடையே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கைக்கு இந்தியா உதவி செய்தது. இந்நிலையில் தான் 2 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு நேற்று வந்தார்.
டெல்லியில் இன்று ரணில் விக்கிரமே சிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்தது. மேலும் இருநாடுகள் இடையேயான கடல்வழி மற்றும் வான்வெளி போக்குவரத்தை மேம்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இடையேயான சந்திப்பில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் யூபிஐ பண பரிவர்த்தனையை அனுமதிக்கும் வகையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதேபோல் தமிழ்நாடு -இலங்கை இடையே பயணிகள் படகு சேவைகள் நடத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் படகு இயக்கப்பட உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான விமான போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications