அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு! 4 டன் மிளகாய் தூளை திரும்ப பெறும் பதஞ்சலி நிறுவனம்
டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் மிளகாய்த் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதால் 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை இந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது. இதற்கான உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSI) வழங்கியுள்ளது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள், சுத்தப்படுத்தும் திரவியங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த பொருட்களை பலர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தொலைக்காட்சிகளில் விளம்பரமும் செய்யப்படுகின்றன.
இந்த நிறுவனத்தை யோகா குரு ராம்தேவும் அவரது நண்பர் பாலகிருஷ்ணாவும் நடத்தி வருகிறார்கள். இவர்கள் பல ஆயுர்வேத பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா காலத்தில் அலோபதி மருந்துகளால் சிகிச்சை அளிக்க முடியாது. தங்களது தயாரிப்புகளே கொரோனாவை தடுக்கும் என பதஞ்சலி விளம்பரம் செய்தது.
இதை தவிர்த்து பல நோய்க்களுக்கு தங்கள் பொருட்கள் குணமளிப்பதாகவும் விளம்பரம் செய்திருந்தது. இதை எதிர்த்து இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. யோகா பாபா ராம்தேவும் அவரது நண்பரும் தவறான தகவல்களை தெரிவித்தமைக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு அதை விளம்பரமாக வெளியிட வேண்டும்.
அதாவது உங்கள் ஆயுர்வேத பொருட்களுக்கு செய்த விளம்பரத்தை காட்டிலும் உங்கள் மன்னிப்பு விளம்பரம் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது.
அது முதலே பதஞ்சலி பொருட்களை வாங்குவதை பலர் விட்டுவிட்டனர். இந்த நிலையில் பதஞ்சலி சார்பில் 200 கிராம் எடை கொண்ட சிகப்பு மிளகாய்த் தூள் விற்பனைக்கு வந்தது. இது குறித்த உணவு கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு புகார்கள் சென்றன. மேலும் இந்த பொருட்கள் உணவுக் கட்டுப்பாட்டு துறைக்கு சோதனைக்காக வரவில்லை என்பதாலும் இதை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இந்த மிளகாய்த் தூளில் பூச்சி மருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பொருட்களை உடனடியாக திரும்ப பெறுமாறு உணவு கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை பதஞ்சலி நிறுவனம் திரும்ப பெறுகிறது.
மேலும் வாடிக்கையாளர்களும் இந்த மிளகாய் தூள் பாக்கெட்டுகளை வைத்திருந்தால் தங்களிடம் ஒப்படைக்குமாறு, அப்படி செய்தால் முழு பணத்தையும் திருப்பி தருவதாகவும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications