டாக்சிகளில் இனி 2 மடங்கு வரை அதிக கட்டணம் வசூலிக்கலாம்.. ஊபர், ஓலாவுக்கு மத்திய அரசு அனுமதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரைட் ஹைலிங் எனப்படும் ஓலா, ஊபர் நிறுவனங்கள் அடிப்படை கட்டணத்தில் இருந்து 2 மடங்கு வரை அதிகக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், உரிய காரணங்கள் இல்லாமல் பயணத்தை ரத்து செய்தால் ரூ.100க்கு மிகாமல் 10% அபராதம் விதிக்கவும் அனுமதி அளித்து மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

நமது நாட்டில் இப்போது ரைட் ஹைலிங் எனப்படும் ஓலா, ஊபர் நிறுவனங்கள் முக்கியமானதாக மாறிவிட்டது. கால் டாக்சி புக் செய்த காலம் எல்லாம் மாலை ஏறிவிட்ட நிலையில், மக்கள் பெரும்பாலும் இந்த ரைட் ஹைலிங் மூலமாகவே டாக்சிகளை புக் செய்கிறார்கள். அதேநேரம் ரைட் ஹைலிங் செயலிகள் பீக் ஹவர்ஸில் அதிகக் கட்டணமும், தேவை குறைவான நேரங்களில் குறைவான கட்டணங்களும் வசூலித்து வந்தன.

Peak Hour Surge Ola Uber Rapido Can Charge Double Base Fare Under New Rules Says Supreme Court

மத்திய அரசு

இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், மதியம் போன்ற நேரங்களில் வழக்கமான கட்டணத்தை விடவும் குறைவாக இருப்பதால் ஒரு தரப்பினர் ஆதரவாகவும் கருத்துகளைக் கூறி வந்தனர். இதற்கிடையே மத்திய அரசு இது தொடர்பாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீக் ஹவர்களில் எந்தளவுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கலாம்.. இதர நேரத்தில் எந்தளவுக்குக் குறைவாகக் கட்டணம் வசூலிக்கலாம்.. அபராதக் கட்டணம் எவ்வளவு விதிக்கலாம் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

2 மடங்கு

அதன்படி ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட ரைட் ஹைலிங் நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் எனப்படும் அதிகப் பயன்பாட்டு நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட இரண்டு மடங்கு வரை கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக இது 1.5 மடங்காக இருந்த நிலையில், அதை 2 மடங்காக உயர்த்தி அனுமதி தரப்பட்டுள்ளது.. அதேபோல் பயன்பாடு இல்லாத நேரங்களில் குறைந்தபட்சமாக அடிப்படை கட்டணத்தில் இருந்து 50% கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகை

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்த புதிய மோட்டார் வாகன வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி சரியான காரணம் இல்லாமல் ஒரு பயணத்தை டிரைவர் ரத்து செய்தால், அவருக்கு ரூ.100க்கு மிகாமல் 10% அபராதம் விதிக்கப்படும். அதேபோல பயணிகளும் இதுபோல ரத்து செய்தால் இதேபோன்ற அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மாநில அரசுகள் இதை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருத்தப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிட்ட சில விதிகளில் கூடுதலாகச் சில விதிகளைச் சேர்க்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

3 கிமீ கட்டணம்

கட்டணக் கட்டுப்பாடு குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணி இல்லாமல் பயணிக்கும் தூரம் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காகப் பயணிக்கும் தூரம், பயன்படுத்தப்படும் எரிபொருள் ஆகியவற்றை ஈடுசெய்யும் வகையில், வசூலிக்கப்படும் அடிப்படை கட்டணம் குறைந்தபட்சம் மூன்று (3) கிலோமீட்டருக்கானதாக இருக்க வேண்டும்.

எதற்குக் கட்டணம்!

அடிப்படை கட்டணத்தை விடக் குறைந்தபட்சம் 50% குறைவாகவும், அதிகபட்சமாக இரண்டு மடங்கு வரையும் கட்டணத்தை ரைட் ஹைலிங் நிறுவனங்கள் வசூலிக்க அனுமதிக்கப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்குப் பயணம் செய்யும் போது தவிர, வேறு எந்தச் சூழ்நிலையிலும் பிக்அப் செய்யத் தனியாகப் பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று அந்த வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

பயணி ஏறும் இடத்தில் இருந்து இறக்கிவிடப்படும் இடம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குவதை ரைட் ஹைலிங் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+