எல்லாத்தையும் கையில் வெச்சிக்கிட்டு.. வாய் திறக்கலேன்னா எப்படி.. பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
பெகாசஸ் விவகாரம் குறித்து மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார் ப சிதம்பரம்
டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் பதிலளிக்க மறுக்கிறார்? அவர் ஏன் பேச மறுக்கிறார்? என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் என்எஸ்ஓ என்ற நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது... இந்த நிறுவனம் பெகாசஸ் என்ற மென்பொருளை தயாரித்துள்ளது..
இதன்மூலம் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள் போன்றோரின் பர்சனல் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவைகள் உளவு பார்க்கப்பட்டதாகவும் புகார் கிளம்பியது.. இந்த செய்தி வாஷிங்டன் டைம்ஸ், தி வயர் உள்ளிட்ட முன்னணி மீடியாக்களிலும் வெளியானது.. இதை பார்த்து உலக தலைவர்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர்.

ராகுல்காந்தி
இந்தியாவிலும் ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர், உள்ளிட்ட 2 மத்திய அமைச்சர்கள், திரிணமூல்காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட சீனியர் அரசியல்வாதிகளின் செல்போன்களும், 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் செல்போன்களும் மத்திய அரசால் உளவு பார்க்கப்பட்டதாகவும், மேலும் அவர்களின் போன்களில் இருந்து சில தகவல்கள் திருடப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

கூட்டம்
இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கொந்தளித்து போயின. இந்த முறை நாடாளுமன்றம் கூடியதுமே இந்த விவகாரத்தை கிளப்ப முடிவு செய்தனர்.. அதன்படியே நாடாளுமன்றம் கூடியதில் இருந்தே ஒரே அமளிதான்.. ஒருநாளும் அவையை நடத்த எதிர்க்கட்சிகள் விடவில்லை.. இந்தியாவில் இப்போதைக்கு எத்தனையோ பல பிரச்சனைகள் சூழ்ந்து கிடந்தாலும், அனைத்து கட்சியினரும் ஒன்றுகூடி சேர்த்து, பெகாஸஸ் விவகாரம் குறித்தே கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

எதிர்க்கட்சிகள்
இந்த விவகாரத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை.. யாரையும் உளவு பார்க்கவுமில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஏற்கனவே விளக்கம் தந்திருந்தும், அதை எந்த கட்சிகள் ஏற்க தயாராக இல்லை.. இந்த போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மேலும் சில அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை அடுத்தடுத்து வெளியிட்டு வந்து கொண்டே இருப்பதால், இந்த பிரச்சனை இப்போதைக்கு முடிகிற மாதிரியும் தெரியவில்லை..

கண்காணிப்பு
இந்த பெகாசஸ் உளவு குறித்து தனி சிறப்பு விசாரணை சுப்ரீம்கோர்ட்டின் கண்காணிப்பில் நடத்தி, உண்மைத் தன்மையை வெளியில் கொண்டுவர வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கையும் வைத்து வருகின்றன. பெகாசஸ் சாப்ட்வேர் உருவாக்கிய இஸ்ரேல் நிறுவனத்துடன் மத்திய அரசு எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது..

ப.சிதம்பரம்
இதையும் எதிர்க்கட்சிகள் ஏற்க தயாராக இல்லை.. ராகுல் உட்பட மம்தா வரை பலரும் மத்திய அரசை தொடர்ந்து இது தொடர்பாக கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார்கள்.. பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு விசாரணை நடத்துவதில் என்ன தயக்கம்? என்ன பயம் இருக்கிறது? என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரடியாகவே குற்றம்சாட்டினார்... இது பாஜக தேசத்துக்கு செய்யும் துரோகம் என்று மம்தா பானர்ஜியும் குற்றம்சாட்டினார். இதற்கும் மேலிடம் எந்தபதிலையும் சொல்லவில்லை..

மவுனம்
இந்நிலையில், அடுத்ததாக ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.. பெகாசஸ் விவகாரத்தில் ஒட்டுமொத்த அமைச்சகங்களின் சார்பில் பதிலளிக்க வேண்டிய பிரதமர் மோடி ஏன் இப்படி மவுனமாக இருக்கிறார் என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்... இது தொடர்பாக ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

ட்வீட்
அதில், "பெகாசிஸ் உரிமையாளரின் நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்பு துறைக்கு எந்த வர்த்தக உடன்பாடும் கிடையாது என்று அந்தத் துறை தெரிவித்துள்ளது.. அது உண்மை என்றே வைத்து கொள்வோம்... ஆனால் ஒரு துறை குற்றமற்றது என்றால், மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன? இந்த விஷயத்தில் கிட்டத்தட்ட 6-7 துறைகள் மீது சந்தேகம் இருக்கிறதே.. எல்லா துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம், பிரதமர் மோடி அவர்களிடம் மட்டுமே உள்ளது... ஆனால், அவர் ஏன் பேச மறுக்கிறார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் சிதம்பரம்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
கருப்பு தங்கம் ஜாக்பாட்! புதினின் சீக்ரெட் ஆஃபர்.. உங்க கிச்சன் வரை ஊடுருவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல்












Click it and Unblock the Notifications